தளபதி விஜய் சிறந்த இயக்குனர்களிடம் நன்றாக கதையை கேட்டு தேர்ந்தெடுத்து நடிப்பதால் அவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் எதிர்பார்க்காத வசூலை பெறுகின்றனர் இதனால் அவரது சினிமா பயணம் உயர்ந்து கொண்டே போகிறது.
கடைசியாக மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இளம் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருடன் கைகோர்த்து பீஸ்ட் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் தளபதி விஜயுடன் கைகோர்த்து பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து அசத்தி உள்ளனர்.
இந்தப் படம் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து தளபதி விஜய் முதல்முறையாக தெலுங்கு திரையுலகம் கால்தடம் பதித்து அடுத்த திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து தனது அடுத்த திரைப்படத்திற்கான இயக்குனரையும் தற்போது தேர்வு செய்துள்ளார்.
அந்த வகையில் விஜய்யின் 67 வது திரைப்படத்திற்கு இயக்குனராக களமிறங்குவர் லோகேஷ் கனகராஜ் என கூறப்படுகிறது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ், விஜய்யும் இணைந்து ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த நிலையில் தற்போது இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணைவதால் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அதேசமயம் ரசிகர்கள் தற்போது ஒரு வேண்டுகோளை லோகேஷ் கனகராஜ் தொடங்கி உள்ளனர் அதாவது மாஸ்டர் படத்தில் வில்லனுக்கு அதிகப்படியான கதாபாத்திரம் கொடுத்து அவருக்கு ஸ்கோர் செய்வது போலவே இருந்தது. நீங்களும் விஜயும் இணையும் அடுத்த படத்தில் இது போன்று இருக்கக் கூடாது என நெட்டிசன்கள் கேட்டுக்கொண்டு வருகின்றனர்.