தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று பல்வேறு சினிமா பிரபலங்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் என பலரும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதேசமயம் விஜய் பற்றிய சில தெரியாத விஷயங்களும் வெளிவந்து ரசிகர்களை உற்சாகபடுத்தியது.
இப்போ தளபதி விஜய் சந்தோஷத்துடன் வாரிசு படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளிவரும் என படக்குழு திட்டவட்டமாக கூறியுள்ளது.
இந்த படத்தை முடித்துவிட்டு தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் உடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி 67 வது படத்தை இயக்க ஆர் ஜே பாலாஜி கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தான் தற்போது மிகப்பெரிய அளவில் சமூக வலைதள பக்கங்களில் பேசப்பட்டு வருகிறதாம்.
நடிகரும் இயக்குனருமான ஆர்ஜே பாலாஜி கடந்த ஜனவரி மாதமே தளபதி விஜய்யை சந்தித்து ஒரு கதையை கூறினாராம். அது விஜய்க்கு ரொம்ப பிடித்த போனதாகவும், நாம் இணைந்து படம் பண்ணலாம் என கூறப்பட்டதாக ஆர்ஜே பாலாஜி தெரிவித்தார் அப்படி என்றால் தளபதி 67 ஆர் ஜே பாலாஜி இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
ஆனால் விஜய் லோகேஷ்க்கு தான் அதிக வாய்ப்பு கொடுப்பார் என கூறப்படுகிறதே ஏனென்றால் அவரது படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதோடு நல்ல வசூல் வேட்டை நடத்துகின்றனர் இதனால் விஜய் இயக்குனர் லோகேஷ்க்கு தான் அதிக முன்னுரிமை கொடுப்பார் என தெரியவருகிறது.