சினிமா உலகில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த பிரபாஸ் திரை உலகில் தனக்கென ஒரு இடம் கிடைக்காமல் போராடி வந்தார். இந்த நிலையில் பிரபாஸ்க்கு இயக்குனர் ராஜமௌலி பாகுபலி என்ற ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தை கொடுத்தார்.
முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாம் பாகம் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் தான் உருவானது இந்தப் படமும் வெளிவந்து வசூல் வேட்டை நடத்தியதால் நடிகர் பிரபாஸும் இந்த படத்தை இயக்கிய ராஜமௌலியும் இந்திய அளவில் பேசப்பட்ட தோடு மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தையும் பிடித்தனர்.
இந்திய சினிமாவில் இதுபோன்ற சிறப்பான கதையை எடுப்பதும் சரி வசூலில் வாரி குவிப்பதும் சரி வருகின்ற காலகட்டத்தில் இந்தப் படத்தை வேறு எந்த ஒரு படமாவது முறியடிக்குமா என்பதே மிகப்பெரிய கேள்வி குறி தான். இயக்குனர் ராஜமௌலி இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ராம்சரன் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரை வைத்து “RRR” என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார்.
நடிகர் பிரபாசும் தற்பொழுது சலார், ராதேஷ்யாம் ஆதி-புருஷ் போன்ற மிகப் பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார் இப்படியிருக்க பிரபாஸின் 26 – வது திரைப்படத்தை யார் இயக்குவார் என.
எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாகுபலி கூட்டணி மீண்டும் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக சமீபத்திய தகவல்கள் கசிந்த நிலையில் அதன் அதிகாரபூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியை தற்பொழுது பாகுபலி சீரிஸ் ரசிகர்களை துள்ளல் ஆட்டம் போட வைத்துள்ளது.