தமிழ் சினிமாவில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்ததோடு ஒரு நடிகராக அசத்தியவர் சிம்பு. ஒரு கட்டத்தில் இயக்குனராகவும், பாடகராகவும், நடன கலைஞராகவும் தன்னை மாற்றிக்கொண்டு சினிமா உலகில் பயணித்தவர் நடிகர் சிம்பு.
இப்படி ஓடிக்கொண்டிருந்தாலும் சமீபகாலமாக இவர் படங்களில் நடிக்காதது பலருக்கும் வருத்தத்தை கொடுத்தது அதை நீண்ட இடைவெளிக்குப்பின் உணர்ந்து கொண்ட சிம்பு தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் அண்மையில் கூட வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம்.
படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தால் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து அவர் பத்து தல, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் கொரோனா குமார் என்ற திரைப்படத்திலும் அவர் நடிக்க உள்ளார் இந்தப் படத்தை கோகுல் இயக்கவுள்ளார்.
இவர் இதற்கு முன்பாக கடந்த 2013ம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதியை வைத்து “இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” என்ற படத்தை இயக்கி வெற்றி கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது சிம்புவை வைத்து “கொரோனா குமார்” என்ற படத்தை எடுக்க உள்ளார்.
இந்த படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். “கொரோனா குமார்” படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் சிம்புவுக்கு நாற்பத்தி எட்டாவது திரைப்படம் ஆகும் இந்த படத்திற்கு ஜாவித் ரியாஸ் இசையமைக்கவுள்ளார் இவர் இதற்கு முன்பாக “மாநகரம்” படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.