சுதா கொங்காராவின் அடுத்த படத்தில் நடிக்கப் போவது யார்.? அஜித்தா.. சூர்யாவா.. சிம்புவா.. அவரே சொன்ன தகவல்.

sudha-
sudha-

சுதா கொங்கரா இறுதிச்சுற்று என்ற படத்தை இயக்கி அறிமுகமானார் முதல் படமே வெற்றி படமாக மாறியதால் சுதா கொங்கரா அடுத்தடுத்து டாப் ஹீரோக்களுக்கு கதை சொல்லும் அளவிற்கு உயர்ந்தார் அந்த வகையில் சூர்யாவிடம் சூரறை போற்று கதையை சொல்ல அது ரொம்ப பிடித்துப் போகவே சூர்யாவும் துணிந்து நடித்தார் படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

மேலும் நல்ல வரவேற்பை பெற்றது இந்த திரைப்படம் தற்பொழுது 5 தேசிய விருதுகளை பெற்று அசத்தி உள்ளது. இதனால் சுதா கொங்கரா அடுத்த படத்தை நோக்கி நகர்ந்தும் உள்ளார். அந்த வகையில் சுதா கொங்கரா தற்பொழுது சூரறை போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார் அதை வெற்றிகரமாக முடிந்து விட்டு அடுத்ததாக யாருடன் இணைவார் என்பது தெரியவில்லை.

ஏனென்றால் அந்த அளவிற்கு பல ஹீரோக்களின் பெயர்கள் இடம்பெறுகின்றன. இயக்குனர் சுதா கொங்கரா சூர்யா, அஜித், சிம்பு போன்றவர்களிடம் கதை கூறி உள்ளார் இதனால் யாரை வைத்து அவர் படம் பண்ண போகிறார் என்பது தெரியாமலேயே இருந்து வந்தன ஒரு கட்டத்தில் சுதா கொங்கரா சிம்புவுடன் இணைய போகிறார் என்றும் மேலும் அஜித்தின் 63 வது படத்தை இவர்தான் இயக்க போகிறார் எனவும் பேசப்பட்டது.

ஆனால் இது குறித்து உண்மையான தகவல் கிடைக்கவில்லை இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அடுத்த படத்தை யாரை வைத்து இயக்கப் போகிறேன் என்று உண்மையை உடைத்து உள்ளார். சுதா கொங்கரா பேசியது. சிம்புவை வைத்து இயக்கப் போவதாக வந்த செய்திகளை நானும் கேட்டேன் தற்போது சிம்புவுடன் நான் பணியாற்றவில்லை..

அடுத்ததாக சூர்யா படத்தை தான் நான் இயக்கப் போகிறேன் தற்பொழுது நாங்கள் இருவரும் கமிட் ஆகி உள்ள படங்களை முடித்த பிறகு நான் சூர்யாவின் 43 வது படத்தை எடுப்பேன் என கூறினார். மேலும் பேசிய அவர் நான் ஹீரோக்களை மனதில் வைத்து படத்தின் கதையை எழுதவே மாட்டேன். அது இதுவரை நான் செஞ்சதும் கிடையாது என கூறினார்.