பிரம்மாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தை வைத்திருக்கும் சங்கர் தற்போது தமிழ் சினிமாவையும் தாண்டி பிற மொழி பக்கங்களில் பணியாற்ற அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் ஹிந்தியில் ரன்பீர் கபூரை வைத்து அந்நியன் படத்தின் ரீமேக் எடுக்கப்பட உள்ளது.
தெலுங்கில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் ராம் சரணை வைத்து ஒரு புதிய படத்தை எடுக்க உள்ளார். இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் கமல், ரஜினி, விஜய் போன்ற நடிகர்களை வைத்து ஏற்கனவே படங்களை எடுத்து விட்டதால் தற்போது வெறுப்பம் திசை திரும்பி உள்ளார்.
இது மற்ற மொழிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தெலுங்கில் ராம் சரணுக்கு கதையை கூறி ஓகே செய்து உள்ளதால் சங்கர் விருவிருப்பாக இந்த படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வருவதாக தகவல்கள் கசிந்தன.
இந்த நிலையில் நடிகர் ராம் சரண், ஷங்கர் இணையும் படத்திற்கு நாயகியை தேர்ந்து எடுத்து விட்டனர் பிரபல சூப்பர் ஸ்டாரான பிரம்மாண்ட நாயகி “கியாரா அத்வானி” இந்த படத்தில் இணைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
இவருக்கு இன்று பிறந்தநாள் என்பதால் பட குழு அவரை கமிட் செய்ததோடு அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்து உள்ளது. இச்செய்தி தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
Joining us on this super exciting journey is the talented and gorgeous @advani_kiara !
Welcome on board ❤️#HappyBirthdayKiaraAdvani#RC15 #SVC50@ShankarShanmugh @AlwaysRamCharan @MusicThaman @SVC_official pic.twitter.com/u4RU0Fs2ee
— Sri Venkateswara Creations (@SVC_official) July 31, 2021