ஒரு நபர் நடிகை நீது சந்திராவை தரதரவென தரையில் இழுத்துச் செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. யாவரும் நலம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நீது சந்திரா இந்த படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பின்னர் தீராத விளையாட்டுப் பிள்ளை, ஆதிபகவான், வைகை எக்ஸ்பிரஸ், உள்ளிட பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
மேலும் நடிகை நீது சந்திரா பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்தார் அதன் பின்னர் ஹாலிவுட்டிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து நடிகை நீது சந்திரா நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தமிழில் ஒரு திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது இதில் நடிகை நீது சந்திரா ஒரு நபர் தரதரவென இழுத்துச் செல்லும் காட்சி படமாக்கப்பட்டது இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் பதிவு செய்துள்ளார் நீது சந்திரா.
நடிகை நீது சந்திராவை தர தர என இழுத்துச் செல்லும் காட்சி எந்த படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சி என்று அவர் குறிப்பிடவே இல்லை. ஆனால் சுந்தர் சி, அனுராக் நடிப்பில் உருவாகி வரும் ஒன் டு ஒன் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தான் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை திருஞானம் என்பவர் இயக்கி வருகிறார்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகை நீது சந்திரா தமிழில் நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர் மத்தியில் கிளம்பி உள்ளது அதுமட்டுமல்லாமல் இந்த காட்சியை வெளியிட்டு ரசிகர்களின் மனதை பதட்டம் அடைய வைத்துள்ளார் நடிகை நீது சந்திரா. விரைவில் அவர் நடிக்கும் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்…