“நானே வருவேன்” படத்தின் தனுஷ் ஜோடி இவரா.? கசிந்த தகவல்.

naane-varuven
naane-varuven

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பல பிரபலங்களை வளர்த்து விட்டவர் செல்வராகவன் அதிலும் குறிப்பாக தனது தம்பியை வைத்து சில சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அவரை உயர்த்தி விட்டார். அதை சரியாக பிடித்து கொண்ட தம்பி தனுஷும் தற்பொழுது சிறப்பம்சம் உள்ள கதைகளை கேட்டு நடித்து வருகிறார். செல்வராகவனும் தனுஷும் இதுவரை திரைப்படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் தான்.

மீண்டும் இவர்கள் எப்போது இணைவார்கள் என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வியாக இருந்து வந்த நிலையில் தற்போது அதற்கும் பதில் கிடைத்துவிட்டது இவர்கள் இருவரும் அடுத்தடுத்த படங்களில் பணியாற்றி இருக்கின்றனர். அந்த வகையில் நானே ஒருவன், ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய திரைப்படங்களில் செல்வராகவனும் தனுஷும் இணையை இருக்கின்றனர்.

இப்படி இருந்த நிலையில் திடீரென செல்வராகவன் இயக்குனர் என்ற அந்தஸ்தையும் தாண்டி தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அந்தவகையில் சாணி காயிதம் என்ற திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து பணியாற்றி உள்ளார். மேலும் தற்போது தளபதி விஜயின் படத்தில் வில்லனாக செல்வராகவன் பணியாற்றி வருவதாக தகவல்கள் கசிகின்றன.

இந்த நிலையில் ஏற்கனவே செல்வராகவன் சொன்னது போல தனது தம்பியை வைத்து நானே ஒரு என்ற திரைப்படத்தை இயக்குவேன் என்றார் அது சொன்னது போலவே நேற்று இந்த திரைப்படத்தின் பூஜை அட்டகாசமாக தொடங்கியது அதில் செல்வராகவன் தனுஷ் மற்றும் பல பிரபலங்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நானே ஒருவன் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக யார் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது குணச்சித்திர மற்றும் ஹீரோயின் கதாபாத்திரங்களில் நடித்துவரும் இந்துஜா தான் அவர் படத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வெகு விரைவிலேயே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என கூறப்படுகிறது.

indhuja
indhuja