மக்கள் மத்தியில் இடம் பிடித்து பின் அரசியலில் களம் இறங்கி முதலமைச்சராக 5 தடவை இருந்தவர் எம்ஜிஆர். இப்பொழுது அவர் நம்முடன் இல்லை என்றாலும் அவருக்கான ரசிகர்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர். சினிமா உலகில் சிவாஜியை போல இவர் வருவார் ரஜினியை போல இவர் வருவார் என நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால் எம்ஜிஆர் போல இன்னொரு நடிகர் இருக்கிறாரா என்றால் நாம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம் ஆனால் ஒரு சில முக்கிய சினிமா பிரபலங்கள் எம்ஜிஆர்க்கு பிறகு இந்த நடிகர் தான் என சொல்லி இருக்கின்றனர் அந்த வகையில் சோ ராமசாமி மருத்துவமனையில் இருக்கும் பொழுது..
ஒரு மருத்துவரிடம் எம்ஜிஆர் உடன் நான் ஒப்பிட்டு பார்க்கும் ஒரே நடிகர் அஜித்தான் என கூறியிருக்கிறார். அரசியலிலும் சரி சினிமாவிலும் சரி எதற்கும் பயப்படாதவர் சோ. அந்த அளவிற்கு அஜித்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது என கூறி இருக்கிறார். சோ சொன்னது கிட்டத்தட்ட உண்மைதான்
ஏனென்றால் ஜெயலலிதா தொடங்கி பல அரசியல்வாதிகளுக்கும் பிடித்த ஹீரோவாக இருந்தவர் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது அப்படி இருக்கையில் சோ சொன்னது உண்மைதான் என பலரும் கூறுகின்றனர். அதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில் மயில்சாமி அஜித்தை சந்தித்து உங்களுக்கு எம்ஜிஆர் ரசிகர்கள் அதிகம் எனக் கூறியிருக்கிறார்
ஆனால் அப்பொழுது அஜித் அதை நம்பவில்லை பின் கொஞ்ச நாட்களில் அதை அஜித் உணர்ந்துவிட்டாராம். எம்ஜிஆர் ரசிகர்களுக்கே தெரியாது ஏன் அஜித்தை பிடிக்கிறது என்று.. ஆனால் காலம் காலமாக எம்ஜிஆர் ரசிகர்கள் அஜித்துக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர் என்பது தான் நிதர்சனமான உண்மை.