Nelson Dilipkumar : தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வருவர் நெல்சன் திலிப் குமார். இவர் முதலில் கோலமாவு கோகிலா என்னும் படத்தை எடுத்து வெற்றி கண்டார் அதன் பிறகு இவர் எடுத்த டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது.
பின் டாப் நடிகர்களுக்கு கதை சொல்ல ஆரம்பித்தார். அப்படி விஜய்க்கு பீஸ்ட் கதை சொல்லி படத்தை எடுத்தார். படம் முழுக்க முழுக்க மாலில் காட்டப்பட்டதால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடியது இதனை தொடர்ந்து ரஜினி உடன் கைகோர்த்து ஜெயிலர் படத்தை எடுத்தார்.
ஆகஸ்ட் 10ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை கொண்டு வருகிறது 4 நாட்கள் முடிவில் மட்டுமே 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வருகின்ற நாட்களிலும் ஜெயிலர் படத்தின் வசூல் அதிகரிக்கும் என கணக்கிடப்படுகிறது.
இப்படியே போகும் பச்சத்தில் ஜெயிலர் திரைப்படம் 1000 கோடி நெருங்குவது உறுதியான பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார் அப்பொழுது அவரிடம் பல்வேறு விதமான கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்தார் அப்படித்தான் நெல்சனிடம் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நெல்சன் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான் தளபதி எப்பவுமே விஜய் தான் என பதிலளித்தார் அவர்கள் இதில் தெளிவாக இருக்கிறார்கள். இப்படி எதுக்கு பிரச்சனையை கிளப்புறீங்க என பதிலளித்துள்ளார் இதை கேள்விப்பட்ட ரஜினி ரசிகர்கள் இந்த செய்தியை பெரிய அளவில் வைரலாகி வருகின்றனர்.