இந்திய அணியின் ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் பார்மட்டில் ரோகித் சர்மா புதிய கேப்டனாக செயல்பட இருக்கிறார். ஏற்கனவே 20 ஓவர் கிரிக்கெட் பார்மட்டில் நியூசிலாந்துடனான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் அதோடு மட்டுமல்லாமல் கேப்டன்ஷிப்பிலும் தனது திறமையை காட்டி 3 – 0 என்ற கணக்கில் வெற்றியை ருசித்தது இந்தியா.
இதனையடுத்து தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் போட்டியிலும் அவர் கேப்டனாக செயல்படுவார் இதனால் இரண்டு வடிவிலான பார்மட்டில் ரோகித் சர்மாவின் ராஜ்ஜியம் இனி நடக்கும் என தெரியவந்துள்ளது. சமீபகாலமாக டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடும் அந்த அஸ்வினை திடீரென நியூசிலாந்து உடலான 20 ஓவர் போட்டியில் மீண்டும் அறிமுகப்படுத்தினார்.
அவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து தனது திறமையையும் காட்டி அசத்தினார் அஸ்வின். அஸ்வின் திறமையை தோனிக்கு பிறகு ரோகித்சர்மா சரியாக கணித்து தற்பொழுது பயன்படுத்தி வருகிறார் ரோகித் சர்மா அஸ்வினை பெரிய அளவில் நம்பி உள்ளார் அந்த காரணத்தினால் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கண்டுவந்த அஸ்வின்.
தற்போது 20 ஓவர், ஒரு நாள் போட்டி என அனைத்திலும் ரோகித் சர்மா அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்க இருக்கிறார். அஸ்வின் ஒரு சாம்பியன் பவுலர் என அண்மையில் ரோஹித் சர்மா தெரிவித்தார் அது உண்மைதான் ஏனென்றால் அஸ்வின் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியில் இருந்த 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் அவர் இருந்தார்
இப்படி முக்கிய போட்டிகளில் அவர் இருந்து ஆட்டத்தின் போக்கை மாற்றி இந்திய அணிக்கு வெற்றி பெற சாதகமாக இருந்தவர் என கூறினார். அதனால் ஒரு சாம்பியன் பவுலர் விட்டுவிடக்கூடாது என்பதற்காக ரோகித் ஷர்மா தன் அருகில் அஸ்வினை வைத்து அழகு பார்க்க இருக்கிறாராம்.