கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் சமந்தா ஆரம்பத்தில் வாங்கிய முதல் வருமானம் எவ்வளவு தெரியுமா.?

samanatha
samanatha

தமிழில் அதர்வா நடிப்பில் வெளிவந்த பானா காத்தாடி திரை படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் சமந்தா. இந்த படத்தை தொடர்ந்து ஜீவாவுடன் நீதானே என் பொன்வசந்தம், விஜயுடன் கத்தி, விக்ரமுடன் பத்து எண்றதுக்குள்ள, தனுஷின் தங்கமகன் போன்ற டாப் நடிகர்களின் படங்களில் நடித்து தமிழில் தனக்கென ஒரு இடத்தை வைத்துக் கொண்டார்.

மேலும் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் முக்கிய நடிகையாக வலம் வரும் சமந்தா தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் யசோதா, சகுந்தலம் போன்ற படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் சமந்தா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அதிகளவு சம்பளம் வாங்கும் நடிகைகளில் சமந்தாவும் ஒருவர் அப்படி அண்மையில் அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் ஒரு கிளாமர் பாடலுக்கு சமந்தா நடனம் ஆடி இருந்தார். அந்த ஒரு பாடலுக்கு நடனமாடியதற்கு மட்டும் 3 கோடி சம்பளமாக பெற்றுள்ளாராம்.

இந்தப் பாடலைத் தொடர்ந்து சமத்தா அடுத்தடுத்து கமிட்டாகி உள்ள படங்களில் தனது சம்பளத்தை அதிக அளவு உயர்த்தி நடித்துவருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் லைவில் ரசிகர்களிடம் உரையாடியபோது ரசிகர் ஒருவர் உங்களது முதல் வருமானம் எவ்வளவு என்று சமந்தாவிடம் கேட்டுள்ளார்.

அதற்கு சமந்தா நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஒரு நிகழ்ச்சிக்கு வரவேற்பு பெண்ணாக சென்றிருந்தேன் அங்கு எனக்கு 500 ரூபாய் கொடுத்தார்கள். அதுதான் எனது முதல் வருமானம் என கூறியுள்ளார்.