தீபாவளியை தனது குடும்பத்துடன் கொண்டாடிய ஜி. பி. முத்து – ரசிகர்களை கவர்ந்த வீடியோ..

muthu
muthu

சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் இருப்பவர்கள் மட்டும் தான்  பிரபலம் அடைவார்கள் என்பது இல்லை இப்பொழுது காலம் மாறிவிட்டது பலரும் புதிய  புதிய செயலிகளை பயன்படுத்தி பிரபலமடைகின்றனர் அந்த வகையில் ஜிபி முத்து முதலில் டிக் டாக் மூலம் பிரபலமடைந்தார் அதனைத் தொடர்ந்து youtube சேனல் ஆரம்பித்து..

தற்போது நல்ல காசு பார்த்து வருவதோடு தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்துள்ளார். இப்படி ஓடிக் கொண்டிருந்த இவரை விஜய் டிவி தொலைக்காட்சி பிக் பாஸ் சீசன் 6ல் இழுத்து போட்டது. ஆரம்பத்தில் இருந்து சிறப்பாக பயணித்த இவருக்கு மக்கள் ஆதரவும் நன்றாக இருந்தது.

ரசிகர்கள் இவரை எப்படியாவது இறுதிவரை அழைத்துச் செல்ல வேண்டும் என நினைத்தனர். இப்படி இருந்த நிலையில் திடீரென ஜி. பி. முத்து என்னை வெளியே விடுங்கள் எனது குடும்பத்தை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை என கேட்டுக்கொண்டார் அதன்படி ஒரு வழியாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே..

வந்து தனது குடும்பத்துடன் வாழ்க்கையை மீண்டும் சந்தோஷமாக தொடங்கியுள்ளார். முதலில் தனது மகன் மகளுக்கு பிரியாணி வாங்கி கொடு அசத்தினார். அதனை அடுத்து தீபாவளியை முன்னிட்டு ஜி பி முத்து தனது மகன் மகள் மற்றும் குடும்பத்துடன் சேர்ந்து தீபாவளியை வேற லெவலில் கொண்டாடி இருக்கிறார்.

அதன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய வீடியோவை.. இதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் வரவேண்டும் என கேட்டுக்கொண்டு வருகின்றனர் ஆனால் இனி அது நடக்காது ஆனால் அதே நடப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை என தெரிய வருகிறது.