யார் யாரையோ கூப்பிடுறாரு ஆனால் என்னை மட்டும் கூப்பிடவே இல்லை வருத்தப்பட்ட தனுஷ்.? ஒரு இயக்குனருக்காக பல வருடம் காத்து இருந்தாராம்.

dhanush-
dhanush-

தமிழ் சினிமாவுக்கு சிறப்பான படங்களை கொடுக்கும் இயக்குனர்களை தேடி நடிகர், நடிகைகள் கதை கேட்க ஆர்வமாக  ஓடுகின்றனர். ஆனால் ஒரே ஒரு சிறந்த  இயக்குனரை கண்டு மட்டும் டாப் நடிகர்களே பயந்து நடுங்கி உள்ளனர்.

அந்த இயக்குனர் வேறு யாருமல்ல பாலா தான். இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு விதமான சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருந்தாலும் இவரது படத்தில் நடிக்க மட்டும் டாப் நடிகர்கள் பலரும் தயங்குகின்றனர் அதற்கு முக்கிய காரணம் கலைஞர்களை கதைக்கு ஏற்றவாறு வற்புறுத்தி படத்தின் சீன்களைம் எடுக்கும் பழக்கம் இயக்குனர் பாலாவிடம் உள்ளது.

அதனால் அவரது படத்தில் நடிக்க பலரும் அஞ்சுகின்றனர். இதுவரை இவர் எடுத்த படங்களான பிதாமகன், பரதேசி, அவன் இவன், சேது போன்ற அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர்  மட்டுமில்லாமல் அனைத்தும் பல விருதுகளை தட்டிச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் பாலாவும் ஒரு சில டாப் நடிகர்களை மட்டுமே தனது படங்களில் நடிக்க வைத்தார். நடிப்பின் மூலம்  அசத்தும் ஒரு சில நடிகர்களை அவர் இன்றுவரை கூப்பிட்டதே கிடையாது அவர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் தான் நடிகர் தனுஷ்.

பாலா, தனுஷ் இருவரும் இணைந்தால் அந்த திரைப்படம் நிச்சயம் மாபெரும் ஹிட்டடிக்கும் என்பதை ரசிகர்கள் எதிர்பார்ப்பு. இது குறித்து இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பே விருது விழா ஒன்றில் நேருக்கு நேர் பேசியுள்ளனர்.

அப்பொழுது தனுஷ் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் ஓகே என்றும், அவர் என்னைக் கூப்பிடவில்லை என்றும் பேசினார். இச்செய்தி தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.