பிக்பாஸ் 6வது சீசனில் களம் காணும் முதல் 5 போட்டியாளர்கள் – யார் யார் தெரியுமா.? வெளிவந்த புதிய அப்டேட்.!

bigboss
bigboss

விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் சீசன் ஆக ஓடிக்கொண்டிருக்கிறது இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் ஆறாவது சீசன் கூடிய விரைவிலேயே தொடங்கப்பட இருக்கிறது இதுவரை ஐந்து சீசன்களை உலகநாயகன் கமலஹாசன் சீரும் சிறப்புமாக நடத்தி வைத்தார் ஆறாவது கட்ட சீசனை யார் தொகுத்து வழங்குவார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

கமலஹாசன் விக்ரம் படத்தை தொடர்ந்து தேவர்மகன் 2, இந்தியன் 2,  சபாஷ் நாயுடு என அடுத்தடுத்த படங்கள் இருப்பதால் இந்த சீசனை அவர் தொகுத்து வழங்கி வைப்பாரா என்பது சற்று கேள்விக்குறியாக இருக்கிறது. கடைசி நேரத்தில் கமல் அல்லது சிம்பு வைத்து தொகுத்து வழங்கிக் கொள்ளலாம் இப்பொழுது போட்டியாளர்களை செலக்ட் செய்வதற்கான வேலை பார்த்து வருகிறது.

சமூக வலைதள பக்கத்தில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது அதாவது மொத்தம் தற்போது ஐந்து போட்டியாளர்களை உறுதியாக செலக்ட் செய்து விட்டதாக தகவல்கள் வெளி வருகின்றன. அந்த பிரபலங்கள் யார் யார் என்பது குறித்து தற்போது தெள்ளத் தெளிவாக பார்ப்போம். முதலாவதாக விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோ மற்றும்  படங்களில் நடித்துவரும் ரக்சன் முதல் போட்டியாளராக உள்ளே நுழைவார் என கூறப்படுகிறது.

இரண்டாவதாக விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் மற்றும் வெள்ளிய திரையில் ஒரு சில கிராமத்து பாடல்களை பாடி பிரபலமடைந்துள்ள ராஜலட்சுமி கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. மூன்றாவதாக மாதவன் நடிப்பில் வெளியான அலைபாயுதே படத்தில் ஷியாம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்த கார்த்தி குமார் இந்த சீசனில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நான்காவதாக விளம்பர படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் அஜய் மெல்வின் களம் இறங்குவார் என தெரிய வருகிறது ஐந்தாவதாக அஜ்மல் அமீர் இவர் தமிழ் மலையாளம் போன்ற படங்களில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து பிரபலமடைந்தவர். இவர் பிக்பாஸ் வீட்டில் ஐந்தாவது போட்டியாளராக  கலந்து கொள்வார்  என தெரிய வருகிறது.