Rajini : திரையுலகில் 48 வருடங்களாக நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை 168 திரைப்படங்களில் நடித்துள்ளார் ஜெயிலர் படம் அவருக்கு 169 திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி அதாவது நாளை கோலாகலமாக உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் இருந்து வெளிவந்த அப்டேட்டுகள் ஒவ்வொன்றும் சூப்பராக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் இந்த நிலையில் ரஜினி திரையுலகில் உச்ச நட்சத்திரமாக திகழ அவருக்கு உறுதுணையாக இருந்த முக்கிய இயக்குனர்கள் யார் யார் என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
எஸ் பி முத்துராமன் : 80, 90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த இயக்குனர்களில் ஒருவர் எஸ் பி முத்துராமன். இவர் ரஜினியை வைத்து எடுத்த வேலைக்காரன், மனிதன், ஆறிலிருந்து அறுபது வரை, முரட்டு காளை என பல படங்களை எடுத்தார். இவை அனைத்தும் அதிக நாட்கள் ஓடி ரஜினியை அடுத்த கட்டத்திற்கு தூக்கிவிட்டது.
கே பாலச்சந்தர் : தற்போது இருக்கும் பல இயக்குனர்களுக்கு முன்னோடியாக திகழ்வுவர் கே பாலச்சந்தர். வில்லனாக இருந்த ரஜினி ஹீரோவாக மாற்றி அழகு பார்த்தார். ரஜினிகாந்த் இவருடன் இணைந்து 10 -துக்கும் மேற்பட்ட படங்களை எடுத்துள்ளார் அதில் அபூர்வராகங்கள், மூன்று முடிச்சு, தில்லுமுல்லு, நெற்றிக்கண் போன்ற பல படங்கள் பெரிய வெற்றியை பதிவு செய்தது.
சுரேஷ் கிருஷ்ணா : கமர்சியல் படங்களில் நடித்த வந்த ரஜினியை மிகப்பெரிய ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியவர் சுரேஷ் கிருஷ்ணா இவர் வீரா, பாட்ஷா, அண்ணாமலை படங்களை கொடுத்து ரஜினியை வேற பரிமாணத்தில் கட்டினார்.
பி வாசு : இவர் ரஜினியை வைத்து சந்திரமுகி, குசேலன், மன்னன், பணக்காரன் என அடுத்தடுத்த படங்களை கொடுத்து வெற்றி கண்டார் குறிப்பாக சந்திரமுகி படம் 800 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டது.
மகேந்திரன் : தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வந்த இவர் ரஜினியை வைத்து கை கொடுக்கும் கை, முள்ளும் மலரும் போன்ற படங்களை கொடுத்து அழகு பார்த்தார்.
ராஜசேகர் : 90களில் ரஜினி நடித்த படிக்காதவன், மாப்பிள்ளை, தர்மதுரை, போன்ற அனைத்துமே வெற்றி பெற்றன இந்த படத்தை அனைத்தும் ராஜசேகர் இயக்கி அசத்தியினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கே எஸ் ரவிக்குமார் : தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் பல நடிகர்களை வளர்த்து விட்டவர் கே எஸ் ரவிக்குமார் இவர் ரஜினியுடன் இணைந்து முத்து, லிங்கா, படையப்பா போன்ற படங்களை கொடுத்து ரஜினி அடுத்த லெவலுக்கு தூக்கி விட்டார்.
ஷங்கர் : ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் பிரம்மாண்ட பட்சத்தில் படங்களை எடுக்கும் இவர் ரஜினியை வைத்து 2.0, எந்திரன், சிவாஜி என அடுத்தடுத்த பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்தவர்.
பா ரஞ்சித் ரஜினியுடன் இணைந்து காலா, கபாலி போன்ற படங்களை கொடுத்தார். கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை வைத்து பேட்ட. நெல்சன் ரஜினியை வைத்து ஜெயிலர் படத்தை எடுத்துள்ளார் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது.