சினிமா உலகில் தொடர்ந்து வெற்றியை கொடுக்கும் நடிகர் கணிசமாக தனது சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போகின்றனர் ஒரு கட்டத்தில் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு சம்பளத்தை வாங்கி அசத்துகின்றனர் இது குறிப்பாக பாலிவுட்டில் நடந்து வருகிறது பாலிவுட்டில் டாப் நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்கள் தான் என்பது கோடி நூறு கோடி எல்லாம் சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்தனர்.
ஆனால் தற்போது அவர்களையும் முந்தி போய்க் கொண்டிருக்கின்றனர் தென்னிந்திய சினிமா உலகில் பயணிக்கும் நடிகர்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக அண்ணாத்த திரைப்படத்திற்காக வாங்கிய சம்பளம் நூறு கோடி என கூறப்படுகிறது அதனால் தனது அடுத்த படத்தில் நடிப்பதற்காக அதைவிட அதிகமாக சம்பளம் வாங்க உள்ளார் என்ற தகவல் உலாவந்து கொண்டிருக்கிறது.
தெலுங்கு சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் பிரபாஸ் பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து 100 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நிலையில் அவரும் தனது அடுத்தடுத்த திரைப்படத்திற்காக சம்பளத்தை சற்று உயர்த்தி உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளன இப்படி இருக்கின்ற நிலையில் இந்திய அளவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள்.
யார் யார் என்பது குறித்து தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது அது குறித்து விலாவாரியாக தற்போது பார்ப்போம். இந்திய அளவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதல் இடத்தில் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். புதிய அடுத்து நடிக்க உள்ள படத்திற்க்கு சுமார் – 150 கோடி சம்பளமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது பாலிவுட் நடிகர் சிவகுமார் சுமார் 135 கோடி சம்பளம். மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது தெலுங்கு ஹீரோ பிரபாஸ் – 130 கோடி. நான்காவது இடத்தில் சல்மான் கான் – 125 கோடி, ஐந்தாவது இடத்தில் தளபதி விஜய் – 100 கோடி, ஆறாவது இடத்தில் பாலிவுட் கிங் கான் ஷாருக்கான் 100 கோடி, ஏழாவது இடத்தில் மகேஷ் பாபு – 70 கோடி.