விஜய் டிவியில் ஒளிப்பரபாக இருக்கும் “பிக்பாஸ் சீசன் 6” -ல் கலந்து கொள்ளபோகும் 11 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா.? லிஸ்ட் இதோ.!

bigboss
bigboss

விஜய் டிவியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி சீசன் சீசன் ஆக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஒவ்வொரு சீசனிலும் பல துறைகளில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டு பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் இடம் பிடிப்பார்கள்.

அப்படி தற்போது வரை ஐந்து சீசன்கள் நிறைவடைந்துள்ளது.  கடைசியாக நிறைவு பெற்ற பிக் பாஸ் ஐந்தில் ராஜு ஜெயமோகன் டைட்டில் வின் செய்தார். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஐந்து சீசன்கள்  உலகநாயகன்  கமலஹாசன் தொகுத்து வழங்கி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கூடிய விரைவில் பிக் பாஸ் சீசன் 6 தொடங்க உள்ளது அதற்கான புரோமோ கூட அண்மையில் வெளியாகியது. அதில் இதுவரை இல்லாத வழக்கத்திற்கு மாறாக பிக் பாஸ் ஆறாவது சீசனில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என்ற செய்தியை ராஜு ஜெயமோகன் வாயிலாக குறிப்பிட்டு இருந்தனர்.

இதன் அடிப்படையில் பிக் பாஸ் 6 யில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை தேர்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் 6 ல் கலந்து கொள்ளும் சில போட்டியாளர்கள்.. யார் யார் என்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி பார்க்கையில் பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்கின்ற டிடி, விஜே ரக்சன், ஜி பி முத்து, ஸ்ரீநிதி, இமானின் முன்னாள் மனைவி மோனிகா.

மற்றும் பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக், பாடகி ராஜலட்சுமி, தர்ஷா குப்தா, ஷில்பா மஞ்சுநாத், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், சத்யா சீரியல் புகழ் ஆயிஷா போன்ற 11 பிரபலங்களும் பிக் பாஸ் 6 யில் கலந்து கொள்ள உள்ளதாக  கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வெளிவரவில்லை.