காலேஜ் படிக்கும் போதே.. அந்த நடிகையை காதலித்திருக்கிறேன் – விஜய் தேவர் கொண்டா பேட்டி..!

vijay-devar-konda
vijay-devar-konda

தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் தமிழில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுடன் நடித்து ஓடி கொண்டிருக்கிறார். இதனால் தமிழில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார்..  அதே சமயம் தெலுங்கிலும் இவர் தனது மார்க்கெட்டை விடாமல் தொடர்ந்து அங்கு வருகிறார்.

அதன் காரணமாக இவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இப்போ இவர் தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் தற்போது சகுந்தலம், யசோதா மற்றும் குஷி என பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் அதில் முதலாவதாக யசோதா திரைப்படம் பிரம்மாண்ட பொருள் செலவில் உருவாகி உள்ளது.

இந்த படத்தில் நடிகை சமந்தா உடன் கைகோர்த்து வரலட்சுமி சரத்குமார், சம்பத் ராஜ், மதுரிமா மற்றும் பலர் நடித்து உள்ளனர். படம் ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படமும் சீக்கிரமே வெளியாக இருக்கிறது அதற்கு முன்பாக இந்த படத்தின் டிரைலர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் போன்றவை தொடர்ந்து வெளி வந்தன.

இதில் ட்ரைலர் மட்டுமே பத்து மில்லியன்னுக்கும் அதிகமானோர் பார்த்தனர்.இப்படி இருக்கின்ற நிலையில் குஷி படத்தில் நடிகை சமந்தாவுடன் நடித்து வரும் நடிகர் விஜய் தேவர் கொண்டா இவர் சமந்தா நடித்த யசோதா படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு அவரும் சில தகவல்களை கொடுத்துள்ளார்.

samantha
samantha

யசோதா படத்தின் டிரைலரை பகிர்ந்த விஜய் தேவர் கொண்ட தனது ட்விட்டர் பக்கத்தில் கல்லூரி நாட்களில் திரையில் முதன் முதலாக பார்த்த பொழுதே அவரை காதலித்தேன் இன்று அவர் இருக்கும் நிலைமைக்கு பெருமையாக இருக்கிறது. அவருக்கு தலை வணங்குகிறேன் என கூறியுள்ளார்.