90 காலகட்டத்தில் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சங்கவி. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஏராளமான மொழி திரைப்படங்களில் நடித்து 95 படங்களுக்கு மேல் நடித்தவர் மேலும் விஜய், அஜித், ரஜினி, விஜயகாந்த், கமல், சரத்குமார், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
முக்கியமாக இவர் அஜித்துடன் அமராவதி, விஜயுடன் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, ரசிகன், விஷ்ணு, நிலவே வா உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் பெற்றது. அந்த வகையில் விஜய்யின் தந்தையான எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை சங்கவி நடித்திருந்தார்.
அந்த வகையில் விஷ்ணு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அஜித் மற்றும் விஜய்க்கு இடையே காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. மேலும் அந்த திரைப்படத்தில் விஜய் மற்றும் சங்கவி மிகவும் நெருக்கமான நடித்திருந்த காட்சிகள் இடம் பெற்றிருந்தது இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்த சங்கவி இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜயுடன் நடித்திருக்கும் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, விஷ்ணு திரைப்படத்தில் விஜயும் நானும் குளிர்ந்த நீரில் குளிக்கும் காட்சியில் நான் மூழ்கி எந்திரித்துவிட்டேன் ஆனால் விஜய் நடுங்கிக் கொண்டிருப்பதை பார்த்த எஸ்ஏ. சந்திரசேகர் விஜயைத் திட்டினார் மேலும் சில நெருக்கமான பாடல் காட்சிகளில் நடிக்கும் பொழுது சங்கட்டமான நிகழ்வுகளும் நடந்திருப்பதாக சங்கவி கூறினார்.
அதன் அடுத்த சங்கவியை பேட்டி எடுத்த நடிகை கௌதமியும் இதற்கெல்லாம் ஒரு தைரியம் வேண்டும் என்று ஆச்சரியமாக கூறினார். சங்கவிக்கு தற்பொழுது சொல்லும் அளவிற்கு மார்க்கெட் இல்லாத காரணத்தினால் சீரியல்களிலும் சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். மேலும் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.