உலக நாடுகளை மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது, இந்த நிலையில் இந்தியாவில் அதிக உயிர் பலி வாங்கிய வைரஸ்களை தற்பொழுது பார்க்கலாம்.
1974 ஆம் ஆண்டு சின்னம்மை இந்தியாவை தாக்கியது, அப்பொழுது மக்கள் சின்னம்மை நோயை பார்த்து அலறினார்கள், சின்னம்மை நோயால் 61 ஆயிரத்து 482 பேர் இந்தியாவில் பாதிக்கப்பட்டார்கள், அதில் 15 ஆயிரம் பேர் உயிரிழந்தார்கள். இதனைத்தொடர்ந்து 1994ஆம் ஆண்டு பிளேக் என்ற நோய் குஜராத்தின் சூரத் பகுதியில் தாக்கியது, அதில் 693 பேர் பாதிக்கப் பட்டார்கள், 56 பேர் உயிரிழந்தார்கள்.
மேலும் 2006 ஆம் ஆண்டு டெங்கு காய்ச்சல் பரவியது அதில் 3 ஆயிரத்து 613 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 50 பேர் உயிரிழந்தார்கள், இதனைத்தொடர்ந்து சிக்கன்குனியா 2006 ஆம் ஆண்டு தென் இந்தியாவில் பரவியது, இந்த வைரஸ் தாக்குதலால் சுமார் 11, 02, 724 பேர் பாதிக்கப்பட்டார்கள் ஆனால் உயிரிழப்பு எதுவும் நடக்கவில்லை.
அதேபோல் குஜராத்தில் 2009 ஆம் ஆண்டு ஹைபடைடிஸ் தாக்கம் ஏற்பட்டு 125 பேர் பாதிக்கப்பட்டதோடு 49 பேர் இறந்தார்கள். இதனைத்தொடர்ந்து 2009இல் பன்றிக்காய்ச்சலால் 36 ஆயிரத்து 240 பேர் பாதிக்கப்பட்டு ஆயிரத்து 833 பேர் இறந்தார்கள்.
மேலும் 2014 ஆம் ஆண்டு மஞ்சள் காமாலையால் ஒடிசாவில் 3966 பேர் பாதிக்கப்பட்டு, 36 பேர் உயிரிழந்தார்கள், பன்றி காய்ச்சல் மீண்டும் 2015 ஆம் ஆண்டு தனது தாக்குதலை தொடங்கியது, அப்பொழுது பன்றிக்காய்ச்சலால் 33 ஆயிரத்து 761 பேர் பாதிக்கப்பட்டதுடன் 2035 பேர் இறந்தார்கள்.
அதேபோல் 2015 ஆம் ஆண்டு சிம்லாவில் மஞ்சகாமலை 1600 பேர் பாதிக்கப்பட்டு 10 பேர் உயிரிழந்தார்கள், இதனைத் தொடர்ந்து கேரளாவில் 2018 ஆம் ஆண்டு நிபா வைரஸ் தாக்கியதில் 19 பேர்தான் பாதிக்கப்பட்டனர், இருந்தாலும் 18 பேர் உயிரிழந்தார்கள், மேலும் 2019ஆம் ஆண்டு பீகாரில் மூளைக் காய்ச்சலால் 647 பேர் பாதிக்கப்பட்டு 166 பேர் உயிரிழந்தார்கள். இந்த நிலையில் தற்போது கோவிட் 19 எனப்படும், கொரோனா வைரசால் இந்தியாவில் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கொரோனா விழிப்புணர்வு : தயவு செய்து வெளியில் போயிட்டு வந்தால் கைகளை சோப் போட்டு நன்றாக கழுவவும். கைகழுவாமல் கண், மூக்கு, வாய் ஆகியவற்றில் கை வைக்காமல் தவிர்க்கவும்.