தமிழ் சினிமா உலகில் வருடத்திற்கு 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளி வருகின்றன அந்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதா என்றால் கேள்வி குறிதான். பாதி திரைப்படங்கள் வெற்றியை ருசிக்கும் பாதி திரைப்படங்கள் தோல்வியை தழுவுவது வழக்கம் இதில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே தேசிய விருதை பெரும். அந்த வகையில் வருடம் தோறும் தேசிய விருது பல்வேறு படங்கள் பெயர் போகின்றன.
அந்த வகையில் இப்போ 68வது தேசிய விருது குறித்த பட்டியில் சமீபத்தில் வெளியிடப்பட்டது இதில் தமிழக திரைப்படங்கள் இரண்டு பல்வேறு விருதுகளை வாங்கி அசத்தி உள்ளது. குறிப்பாக சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படம் மட்டுமே மொத்தம் ஐந்து விருதுகளை அள்ளி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் தமிழ் திரைப்படங்கள் தேசிய விருது பெற்றுள்ளன ஆனால் ஒரே திரைப்படம் அதிக தேசிய விருதை பெற்றுள்ள திரைப்படம் எது என்பது குறித்து தற்போது விலாவாரியாக பார்ப்போம்.
சூர்யா நடித்த சூரரை போற்று திரைப்படம் (2020) ஐந்து தேசிய விருதுகள் பெற்றது. சிறந்த நடிகர்- சூர்யா, சிறந்த நடிகை – அபர்ணா பால முரளி, சிறந்த திரைக்கதை – சுதா கொங்கரா ஷாலினி உஷா நாயர், சிறந்த பின்னணி – இசை ஜீவி பிரகாஷ் குமார், சிறந்த திரைப்படம் – சூரரை போற்று.
(2010) ஆம் ஆண்டு ஆடுகளம் திரைப்படம் ஐந்து தேசிய விருதுகளை அள்ளி உள்ளது. சிறந்த நடிகர் – தனுஷ், சிறந்த இயக்கம் – வெற்றிமாறன், சிறந்த நடனம் – தினேஷ்குமார், ஸ்பெஷல் ஜூரி விருது – ஜெயபாலன், சிறந்த திரைக்கதை – வெற்றிமாறன்.
(2002) ஆம் ஆண்டு வெளியாகி அதிக விருதுகளை பெற்ற தமிழ் திரைப்படங்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது கன்னத்தில் முத்தமிட்டாய். இந்த படம் ஆறு விருதுகளை அள்ளி உள்ளது. சிறந்த இயக்குனர் – மணிரத்தினம், சிறந்த இசையமைப்பாளர் – ஏ ஆர் ரகுமான், சிறந்த பாடலாசிரியர் – வைரமுத்து, சிறந்த குழந்தை – நட்சத்திரம் கீர்த்தனா, சிறந்த படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத், ஸ்ரீதர். சிறந்த ஒளிப்பதிவு – எ.எஸ் லக்ஸ்மி நாராயனன்.