நடிகர் அஜித்குமார் வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 61-வது திரைப்படமான துணிவு படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரகனி, யோகி பாபு, அஜய், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் என அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தை எதிர்த்து விஜயின் வாரிசு திரைப்படம் பொங்கலை குறி வைத்து ரிலீஸ் ஆகிறது.
வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக உருவாகி வருகிறதாம் இதில் விஜய் மிகப்பெரிய ஒரு பணக்காரராக நடித்துள்ளார் என கூறப்படுகிறது. 8 வருடங்கள் கழித்து இருவரும் நேருக்கு நேர் மோத உள்ளனர். இதனால் தல, தளபதி ரசிகர்கள் பொங்கலை மிகப்பெரிய அளவில் கொண்டாட காத்திருக்கின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகரும், அரசியல்வாதியுமான ஒருவர் அஜித், விஜய் படங்கள் குறித்து பேசி இருக்கிறார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. அந்த பிரபலம் வேறு யாரும் அல்ல நாஞ்சில் சம்பத் தான் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் முதலில் அஜித்தின் துணிவு படத்தை முதலில் பார்பீர்களா.?
விஜயின் வாரிசு படத்தை பார்பீர்களா என கேட்டு உள்ளனர். அவர் சொன்னது முதலில் நான் அஜித்தின் துணிவு திரைப்படத்தை தான் பார்ப்பேன் அதிரடியாக கூறியுள்ளார் அவர் சொன்ன தகவல் தற்போது தல ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது மேலும் அந்த வீடியோ இணையதள பக்கத்தில் பகாரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.
Varisu vs Thunivu.
Politician Nanjil Sampath prefers to watch Thunivu. pic.twitter.com/SFIO1BS3Ev
— Blue Sattai Maran (@tamiltalkies) November 8, 2022