சினிமா உலகில் இருக்கும் நடிகர்கள் பெரும்பாலும் நல்ல நண்பர்களாக இருந்தாலும் படங்கள் என்று வந்துவிட்டால் போட்டி போட்டுக் கொள்வது வழக்கம் அந்த வகையில் அஜித், விஜய் பல தடவை நேருக்கு நேர் மோதி உள்ளனர் அதில் விஜயின் கை ஓங்கி இருந்தது. இருபின்னும் அஜித் சும்மா விடுவதில்லை மோதிக் கொண்டுதான் இருக்கிறார்.
அந்த வகையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு ஆகிய இரு திரைப்படங்களும் பொங்கலை முன்னிட்டு கடந்த 11ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இரு திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்போது சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படி இருந்தாலும் வசூலில் யார் கை ஓங்கி உள்ளது என்பதை தெரிந்து கொள்ள மீடியா எப்படி அதிகம் ஆர்வம் காட்டுகிறது அதுபோல ரசிகர்களும் பெரிய அளவில் எதிர்பார்த்து வந்தனர். அதன்படி முதல் ஐந்து நாட்கள் முடிவில் தமிழகத்தில் அதிக வசூலை அள்ளி துணிவு திரைப்படம் முதல் இடத்தை பிடித்தது.
இந்த நிலையில் 6 நாள் முடிவில் அஜித்தின் துணிவு.. விஜய்யின் வாரிசு.. திரைப்படங்கள் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது. 6 நாள் முடிவில் விஜயின் வாரிசு திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 73 கோடி ரூபாய் வரை வசூல் செய்து உள்ளதாம்.
ஆனால் அஜித்தின் துணிவு திரைப்படம் 75 கோடி வசூல் செய்து முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு வருகிறது இதனால் அஜித் ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். வருங்கின்ற நாட்களில் வசூலில் மாற்றம் ஏற்படுமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.