மலேசியாவில் அதிக வசூல் செய்த படம் எது.? துணிவா.. வாரிசா..

ajith-vijay
ajith-vijay

திரை உலகில் போட்டி பொறாமைகள் அதிகம் இருக்கின்றது அதை ஒரு சில நடிகர்கள் வெளிப்படையாக சொல்லுவார்கள், ஒரு சிலர் மறைமுகமாக மோதுவது உண்டு. அப்படி நடிகர் அஜித்தும் விஜய்யும் பல தடவை நேருக்கு நேர் மோதி உள்ளனர். இதில் விஜயின் கை ஓங்கி இருந்தாலும்..

சமீப காலமாக அஜித்தும் மாஸ் காட்டி வருகிறார். இந்த நிலையில் கடந்த பொங்கலை முன்னிட்டு அஜித்தின் துணிவு விஜயின் வாரிசு படமும் நேருக்கு நேர் மோதியது இரண்டு திரைப்படங்களும் வெவ்வேறு  கதைகளம் கொண்டதால் மக்கள் மற்றும் ரசிகர்கள் இரண்டு படத்தையும் போட்டி போட்டுக்கொண்டு பார்த்தனர்.

அதன் காரணமாக உலகம் முழுவதும் இரண்டு திரைப்படங்களும் நல்ல வசூலை அள்ளியது.  குறிப்பாக தமிழகத்தில் மட்டும் இரண்டு திரை படங்களும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது இப்படி இருக்கின்ற நிலையில் மலேசியாவில் எந்த திரைப்படம் அதிக வசூல் செய்து உள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது அதன்படி பார்க்கையில்

மலேசியாவில் ஆரம்பத்தில் அஜித்தின் துணிவு கை ஓங்கி இருந்த நிலையில் தற்போது விஜயின் வாரிசு படத்தின் கை ஓங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது வசூல் நிலவரப்படி அங்கு வாரிசு 18 கோடியும் அஜித்தின் துணிவு திரைப்படம் 16 கோடியும் வசூல் செய்துள்ளது.

இரண்டு கோடிகள் அதிகமாக அள்ளி மலேசியாவில் வாரிசு கொடியை விஜய் பரக்கவிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த தகவள் தளபதி ரசிகர்களால் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.