வெளுத்து வாங்க போகும் கனமழை.. நாளை எந்தெந்த மாவட்டத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை…

தமிழகத்தில் கனமழை எதிரொலியாக நாளை அக்டோபர் 15ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் ஐந்து நாட்களுக்கு கனமழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது அதிலும் குறிப்பாக சென்னை மக்களுக்கு தான் அச்சுறுத்தும் விதமாக கனமழை அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் சென்னையில் சுற்றி உள்ள மூன்று மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனமழை காரணமாக முன்னணி எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர், ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து முன்னெச்சரிக்கை ஏற்பாட்டை எடுத்துள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் அதனைத் தொடர்ந்து புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது விழுப்புரம் மாவட்டத்திற்கும் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதேபோல் கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது எனவும் அறிவித்துள்ளார்கள்.