குறைந்த ஓட்டுகள் வாங்கி.. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகும் போட்டியாளர் யார் தெரியுமா.?

விஜய் டிவியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி வருடம் தோறும் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் முதல் சீசன் சற்று தயக்கங்களுடன் ஆரம்பித்திருந்தாலும் போகப்போக இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது அதை தொடர்ந்து சீசன் சீசன் ஆக நடந்து வருகிறது. தற்போது பிக் பாஸ் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் மக்களுக்கு பரீட்சயமான மற்றும் பரீட்சய மற்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்த பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் புதுப்புது டாஸ்குகள் வைத்து அதில் போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பாக பங்கு பெற்று வருகின்றனர். இந்த பிக் பாஸ் ஆறாவது சீசனின் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

அதில் ஜி பி முத்து சில காரணங்களால் வெளியேற அவரை தொடர்ந்து சாந்தி, அசல் கோளாறு, நிவாஷினி, குயின்சி, ராபர்ட் மாஸ்டர், விஜே மகேஸ்வரி போன்ற போட்டியாளர்கள் எலிமினேஷனில் வெளியேறினர் சென்ற வாரம் கூட ஆயிஷா மற்றும் ராம் இருவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர்.

60 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆட்கள் குறைய குறைய கடுமையாக போட்டிகள் நிலவுகிறது மற்றும் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பிரச்சினை நடத்த வண்ணம் இருக்கின்றன. இந்த வார டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும் சொர்க்கவாசிகள் நரகவாசிகள் என இரு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இதில் அனைவரும் அவர்களது பங்களிப்பை முழு ஈடுபாட்டுடன் கொடுத்து வருகின்றனர்.

இப்படி இருக்க இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற மணிகண்டன், ஏ டி கே, ரக்ஷிதா, அசீம், விக்ரமன், ஜனனி போன்ற ஆறு போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டனர். என்னதான் பிக் பாஸ் வீட்டில் ரூடாக நடந்து கொண்டாலும் மக்களின் அதிகமாக வாக்குகளின் படி அசீம் தான் முதலிடத்தில் இருக்கிறார். கடைசி இடத்தில் ஏடிகே மற்றும் மணிகண்டன் இருக்கின்றனர் இந்த இருவரில் யாரோ ஒருவர் தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகின்றனர்.

Leave a Comment

Exit mobile version