தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித் குமார் இவர் தற்பொழுது தனது 61 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு சென்னை மற்றும் புனே ஆகிய பகுதிகளில் படமாக்கப்படும் என கூறப்படுகிறது.
ஆனால் படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பாக நடிகர் அஜித்குமார் ஐரோப்பிய நாடுகள் பக்கம் பைக்கை எடுத்துக் கொண்டு சுற்றித் திரிந்து வருகிறார் அதன் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதள பக்கத்தில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது.
வெகு விரைவிலேயே இரண்டாவது கட்ட ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது அஜித்தின் 61வது திரைப்படத்தை ஹச். வினோத் இயக்குகிறார். போனி கபூர் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் இந்த படத்தை தயாரிக்கிறார். ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக ஜிப்ரான் கமிட் ஆகியுள்ளார். அஜித்தின் 61 வது திரைப்படம் முழுக்க முழுக்க bank robery மையமாக வைத்து உருவாகிறது.
அதனால் இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது இந்த படத்திற்கு நடிகர் அஜித் புதிய கெட்டப்பில் நடிக்க இருக்கிறார் மேலும் இந்த படத்திற்காக சுமார் 20 இலிருந்து 25 கிலோ உடல் எடையை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது ஆனால் இந்த படத்தில் இவரை தொடர்ந்து யார் யார் நடிக்கிறார்கள் என்பது நமக்கு அதிகாரப்பூர்வமாக தெரியாது.
இப்பொழுது கிடைத்துள்ள தகவலின்படி ஒரு சிலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள் என்பது கிட்டத்தட்ட உறுதியாகப்பட்டுள்ளது அந்த வகையில் அஜித்தை தொடர்ந்து இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, வீரா, ஜான் கோக்கேன், மகாநதி சங்கர், கவின், ஜி எம் சுந்தர் போன்றவர்கள் நடித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.