இயக்குனர் நெல்சன் “பீஸ்ட்” படத்தின் கதையை முதலில் எந்த நடிகருக்கு கூறியிருந்தார் தெரியுமா.?

beast
beast

இயக்குனர் நெல்சன் வெள்ளித் திரைக்கு வருவதற்கு முன்பாகவே சின்னத்திரையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது இருப்பினும் சிறப்பான கதைகளை உருவாக்குவதில் கை தேர்ந்தவராக இருந்ததால் அடுத்த அடுத்த காமெடி உள்ள படங்களை கொடுத்தார்.

அந்த வகையில் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி அமைத்து டாக்டர் என்னும் படத்தை எடுத்திருந்தார். இந்த இரண்டு படங்களுமே அதிரிபுதிரி ஹிட் அடிக்க டாப் நடிகர்களுக்கு கதை சொல்லும் அளவிற்கு நெல்சன் உயர்ந்துள்ளார்.

மூன்றாவதாக பீஸ்ட் படத்தின் கதையை விஜய்க்கு சொல்லி முடித்தார் இந்த படமும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் எடுத்தது படம் ஏப்ரல் 13ம் தேதி உலக அளவில் வெளியானது ஆனால் முந்தைய கதைகளைக் காட்டிலும் நெல்சன் இந்தப் படத்தின் கதையை சற்று வித்தியாசமாக எடுத்து இருந்தார்.

அதனால் என்னவோ இந்த படம் ரசிகர்களுக்கு சரியாக பிடிக்கவில்லை. பீஸ்ட் திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது இருப்பினும் வசூலில் பெரிய அளவு வேட்டை நடத்தாமல் ஓரளவு போட்ட படத்தின் பட்ஜெட்டை தாண்டி அள்ளும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் பீஸ்ட் படத்திற்கு முதன் முதலில் நடிக்க இருந்த நடிகர் வேறு ஒருவர் என தகவல் வெளியாகி உள்ளது இயக்குனர் நெல்சன் சின்னத்திரையில் பணியாற்றும்போது சிவகார்த்திகேயனுடன் நல்ல நட்பு ரீதியாக இருந்துள்ளார் அதனால் நெல்சன் உருவாக்கிய அனைத்து கதைகளுமே சிவகார்த்திகேயன் கேட்டிருந்தார்.

ஆம் அதில் அவருக்கு பிடித்தது என்னவோ டாக்டர் திரைப்படத்தின் கதை ஒன்றினை மட்டும் தேர்வு செய்து நடித்து விட்டு மற்ற படத்தின் கதைகளையும் கேட்டுள்ளார். அப்படித்தான் முதலில் பீஸ்ட் படத்தின் கதையையும் சிவகார்த்திகேயன் தான் கேட்டு விட்டு பின் விட்டுள்ளார் அந்த வாய்ப்பு பின் விஜய்க்கு சென்றதாக கூறப்படுகிறது.