கடந்த ஐந்து வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வந்தது இந்த ஐந்து நிகழ்ச்சிகளும் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள் அந்த போட்டியாளர்கள் பலரும் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நிலையில் இந்த வருடம் ஆறாவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த ஆறாவது சீசனில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டு வருகிறார்கள்.
இதில் பல புது முகங்கள் கலந்து கொண்டுள்ளார்கள் அதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது இதன் நிலையில் தற்பொழுது பிக் பாஸ் ஆறாவது சீசன் ப்ரோமோ வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாக வருகிறது. இதில் பாத்திரம் கழுவும் அணியின் தலைவர் ஜனனி தன்னுடைய அணியில் இருந்து ஒருவரை வெளியே அனுப்பியுள்ளார் அதற்கு பதில் வெளியே கார்டன் ஏரியாவில் தூங்கிவரும் ஒருவரை தனது அணியில் சேர்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்.
இது ஜிபி முத்துவை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது அது மட்டும் இல்லாமல் ஜிபி முத்துவை காரணத்துடன் அணியில் இருந்து வெளியேற்றி உள்ளார்கள் அதேபோல் வேறொரு நபரை அணியில் சேர்த்து உள்ளார்கள் இதனால் கடுப்பான ஜி பி முத்து நான் வேலை செய்யவில்லை என்று சொல்கிறாயா என கேட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் நீங்கள் நேரடியாக எலிமினேஷனுக்கு செலக்ட் ஆகி உள்ளீர்கள் என சக போட்டியாளர்கள் கூறுகிறார்கள் எலிமினேஷனா என ஷாக் ஆகிறார் ஜி பி முத்து.
இதனால் பிக் பாஸ் வீட்டில் பூகம்பம் வெடித்துள்ளது ஏனென்றால் இதன் மூலம் அடுத்த வாரத்திற்கான நேரடி நாமினேஷனுக்கு சென்றுள்ளார் ஜி பி முத்து. மேலும் இவர் அறியாமையை வைத்து பலரும் கேலி கிண்டல் செய்து சிரிக்கிறார்கள். இனி வரும் எபிசோடுகளில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ.