உங்க பிரமாண்டத்தை தமிழ் தயாரிப்பாளர் கிட்ட வச்சுக்கோங்க எங்கிட்ட வேணாம் ஷங்கருக்கு டோஸ் விட்ட பிரபல தயாரிப்பாளர்.!

sangar
sangar

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் சங்கர். இவர் நிலைமை தற்போது மிகவும் பரிதாபமான நிலைமையாக இருந்து வருகிறது. ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சங்கர் இவர் இயக்கிய முதல் திரைப்படத்தில் மட்டும்தான் அளவான பட்ஜெட்டில் படத்தை இயக்கினார். அதன்பிறகு இவர் இயக்கத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியது.

இவர் பிரமாண்டம் என்ற பெயரில் வீண்செலவு செய்வதாக பலரும் குற்றச்சாட்டி வந்தார்கள் அதுமட்டுமல்லாமல் இவர் படத்தில் பாடலுக்காக பல கோடி செலவு செய்வது தயாரிப்பாளர்களின் தலையில் துண்டைப் போட வைத்துள்ளது.  ஏனென்றால் தயாரிப்பாளர் போட்டுள்ள பட்ஜெட்டை தாண்டி அதிக செலவு செய்து வருவதாக சங்கர் மீது குற்றச்சாட்டு இருந்தது.

இவர் ஒரு படத்தில் ரோட்டுக்கு பெயிண்ட் அடிப்பது பாறைகளுக்கு பெயிண்ட் அடிப்பது என வீண் செலவு செய்துள்ளார். சங்கர் திரைப்படத்தில் அதிக செலவு என்று பார்த்தால் பாடல் காட்சிகளுக்கு தான். அதுவே ராஜமவுலி திரைப்படம் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை பிரமாண்டமாக இருக்கும். அந்த வகையில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகிய பாகுபலி மற்றும் பாகுபலி இரண்டாவது பாகம் மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது.

அந்த வகையில் ஷங்கரிடம் இருந்த பிரமாண்ட பெயரை தட்டிப்பறித்து சென்றவர் ராஜமௌலி. இந்தநிலையில் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியாகிய எந்திரன் 2.0 எதிர்பார்த்த வெற்றியை பெறமுடியவில்லை. இந்த திரைப்படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை. இதற்கு காரணம் ஷங்கரை வைத்து எந்த ஒரு தயாரிப்பாளரும் படத்தை தயாரிக்க முன்வரவில்லை.

இதற்கிடையில் கமலஹாசன் நடிப்பில் இந்தியன்2 திரைப்படத்தை தொடங்கினார் சங்கர் ஆனால் அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கும் சங்கருக்கும் மிகப்பெரிய வாக்குவாதம் ஏற்பட்டதால் படம் தொடங்கிய நேரத்திலேயே கைவிடப்பட்டது. இந்த நிலையில் தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிப்பில் பான் இந்தியா திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார் ஷங்கர். பொதுவாக சங்கர் திரைப்படத்தில் சங்கர் என்ன கூறுகிறாரோ அதனை உடனடியாக தயார் செய்து கொடுப்பார்கள் தயாரிப்பாளர்கள்.

இந்த நிலையில் கடைசியா ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் 2.0 திரைப்படத்தில் துணை நடிகர்களை அழைத்து வருவதற்காகவும் செட் அமைப்பதற்காகவும் கமிஷன் வாங்கியதாக மிகப்பெரிய குற்றச்சாட்டில் இருந்து வருகிறது. இந்தநிலையில் ராம்சரனை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர் இதன் பட்ஜெட்டை மிகவும் தீவிரமாக கண்காணித்து வருகிறது தயாரிப்பு நிறுவனம்.

இந்த நிலையில் ராம்சரன் புதிய திரைப்படத்தில் பாடல் காட்சி ஒன்றுக்கு ரூபாய் 10 கோடி பட்ஜெட் என கணக்குப் போட்ட தயாரிப்பு நிறுவனத்திடம் கூறியுள்ளார் சங்கர்  இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜ் கவனத்திற்கு இந்த தகவல் கொண்டு போனார்கள்  உடனே இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜ் சங்கரை தொடர்பு கொண்டு இதெல்லாம் வேண்டாம் பட்ஜெட்டுக்குள் படம் எடுங்கள் இல்லையென்றால் உங்கள் சம்பளத்தில் கை வைக்கப்படும் என எச்சரித்துள்ளார் தயாரிப்பாளர் தில்ராஜ்.

அதுமட்டுமில்லாமல்  ஒரு படத்தில் பாட்டிருக்காக  10 கோடி ரூபாய் செலவு செய்வது என்பது தமிழ்  தயாரிப்பாளர்களிடம் உங்கள் விளையாட்டை வைத்துக் கொள்ளுங்கள். எங்கிட்ட வேணாம் என தில் ராஜ்  அவர்களது நட்பு வட்டாரத்தில் கூறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது ஏற்கனவே ஷங்கர் தன்னுடைய மகள் திருமணத்தில் மிகப்பெரிய சிக்கல் இருப்பதால் மிகப்பெரிய மனவேதனையில் இருக்கிறார்.

இந்த நிலையில் இந்த தகவலும் அவருக்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுத்துள்ளது.