ரசிகர்களை உச்சகட்ட எதிர்பார்ப்பில் ஏங்க வைக்கும் எச் வினோத்.! துணிவு படத்தில் இருக்கும் வேற லெவல் சஸ்பென்ஸ்…

thunivu
thunivu

துணிவு திரைப்படத்திலிருந்து பல அப்டேட்டுகள் வெளி வந்தாலும் இன்னும் சில சஸ்பென்ஸ் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது இதனால் ரசிகர்கள் துணிவு திரைபடத்திர்க்காக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

இயக்குனர் ஹச் வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் உருவான நேர்கொண்ட பார்வை, வலிமை, திரைப்படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக இருவரும் துணிவு திரைப்படத்தின் மூலம் மறுபடுயும் இணைந்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

இதனை தொடர்ந்து துணிவு திரைப்படத்திலிருந்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி கொண்டே இருக்கிறது. அந்த வகையில் துணிவு திரைப்படத்திலிருந்து வெளியான பாடல்கள், ட்ரெய்லர், துணியு படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்கள் என அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகிய நிலையில் நேற்று துணிவு திரைப்படத்திலிருந்து hd புகைப்படங்கள் வெளியானது.

பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து சமீபத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கதாபாத்திரங்களை அறிவித்த படக்குழுவினர்  அஜித்தின் கதாபாத்திரம் என்னவென்று அறிவிக்கவில்லை.

ட்ரைலரில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது அது மட்டுமல்லாமல் ட்ரெய்லரில் அஜித்தின் லுக்கை பார்த்து பலரும் வியந்து விட்டார்கள் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் அஜித்தின் கதாபாத்திரம் தெரியாமல் இருந்தாலும் அவருடைய அந்த வில்லத்தனமான சிரிப்பு, நடனம், வசனம், என அனைத்தையும் வைத்து ஒரு சஸ்பென்சை வைத்துள்ளார் எச் வினோத்.

அதாவது துணிவு திரைப்படத்தின் தொடக்கத்தில் இருந்து அஜித்தின் கதாபாத்திரத்தின் பெயர் என்னவென்று யாருக்குமே தெரியாதாம் கடைசியில் தான் அஜித்தின் கதாபாத்திரத்தின் பெயர் அறிவிக்கப்படும் என்று தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது இதனால் ரசிகர்கள் மத்தியில் துணிவு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து உள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க துணிவு திரைப்படத்துடன் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் வெளியாக இருக்கிறது இதனால் அஜித், விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் அலப்பறை செய்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த இரண்டு படத்தில் எந்த படம் பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடிக்கும் என்று தற்போதையிலிருந்து போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள்.