வடசென்னை 2 எப்போ ரெடியாகும்.? ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த வெற்றிமாறன்..!

vadachennai
vadachennai

இயக்குனர் வெற்றிமாறன் தனது திரை பயணத்தில் இதுவரை விரல் விட்டு என்னும் அளவிற்குத்தான் படங்களை எடுத்திருக்கிறார் ஆனால் அவர் எடுத்த படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது முதலில் தனுஷை வைத்து பொல்லாதவன் படத்தை எடுத்து வெற்றி கண்டார் அதனை தொடர்ந்து இந்த ஜோடி வட சென்னை, அசுரன், ஆடுகளம் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வந்தது திடீரென தனுஷ் ஒரு பக்கம் இளம் இயக்குனர்களுடன் கைகோர்த்து படம் பண்ண மறுப்பக்கம் இயக்குனர் வெற்றிமாறன் தனுஷிடம் இருந்து தற்போது திறமையான நடிகர்களுடன் கைகோர்த்து படம் பண்ணி வருகிறார் அந்த வகையில் அண்மையில் விடுதலை திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதன் இரண்டாவது பாகத்தை எடுக்க தற்போது வெற்றிமாறன் வேலை பார்த்து வருகிறார் இந்த படத்தை தொடர்ந்து விஜய் உடன் அவர் படம் பண்ண போவதாகவும், பிறகு வாடிவாசல் படத்தை எடுக்கப் போவதாகவும் தகவல்கள் எல்லாம் வெளியாகின இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெற்றிமாறன் வடசென்னை 2 படம் குறித்து பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது நிச்சயம் வடசென்னை 2 எடுப்பேன் என உறுதியாக கூறினார் மேலும் பேசிய அவர் அடுத்ததாக விடுதலை 2 படத்தை எடுப்பேன் அதை முடித்த பிறகு சூர்யாவுடன் இணைந்து வாடிவாசல் படத்தை எடுத்த பிறகு தான் வடசென்னை 2 உருவாகும் என கூறி இருக்கிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் இது போதும் எப்படியோ வட சென்னை 2 வந்தால் போதும் எனக்கூறி கமெண்ட் அடித்து இந்த தகவலை இணையதள பக்கத்தில் பகிர்ந்து பரப்பி வருகின்றனர்.