குட்டி பாப்பா எப்ப வரும்.? சூரியை நச்சரிக்கும் அவரது மகன் மற்றும் மகள்.! இரட்டைக் குட்டி பாப்பா வந்தாச்சு வைரலாகும் வீடியோ.!

தமிழ் சினிமாவில் செந்தில், கவுண்டமணி, சந்தானத்திற்கு பிறகு முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் முன்னணி நடிகர்களான சூர்யா, சிவகார்த்திகேயன் என பல நடிகர்களின் திரைப்படத்தில் காமெடியனாக நடித்து உள்ளார் இந்த நிலையில் தற்போது முதன்முறையாக ‘விடுதலை’ என்ற திரைப்படத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இந்த நிலையில் காமெடி நடிகர் பரோட்டா சூரிக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும் அப்படி இருக்கையில் தற்பொழுது இரட்டை பாப்பா வந்தாச்சு என வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

பரோட்டா சூரி வீட்டில் புறா வந்து இரண்டு குஞ்சுகள் பொறித்துள்ள நிலையில் தங்களுடைய வீட்டிற்கு குட்டி இரட்டை  பாப்பா வந்துள்ளதாக சூரி அறிவித்துள்ளார் அந்தப் புறாக்களுக்கு அவருடைய குழந்தைகள் உணவு கொடுக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது மேலும் இந்த வீடியோ உடன் இணைந்து கொரோனா விழிப்புணர்வை மக்களுக்கு கூறியுள்ளார்கள். இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமல்ல பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் சொந்தம் எனவும் நாம் அவர்கள் வாழ்ந்துவந்த காட்டை அழித்து விட்டு தான் தற்பொழுது விண்ணை முட்டும் அளவிற்கு கட்டிடங்களை கட்டியுள்ளோம்.

காடுகளை அழித்ததால் தான் ஆக்சிஜனை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று சூரிய மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார் இந்த நிலைகள் சூரி அந்த வீடியோவில் இந்த உலகம் அவர்களுக்கானது அவர்களை விரட்டிவிட்டு நாம் பெரிய பெரிய கட்டடங்களைக் கட்டி வாழ்ந்து வருகிறோம். என்றும் அவர்களுக்கும் இந்த உலகம் சொந்தம் பறவைகள் மற்றும் விலங்குகள் குறித்து விழிப்புணர்வை அவர் பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவுக்கு பலரும் லைக் போட்டு ஷேர் செய்து வருகிறார்கள்.