விஜயகாந்த் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தட்டை வெடுகென்னு பிடுங்கி நம்பர்.! பிறகு நடந்தது என்ன தெரியுமா.?

vijayakanth
vijayakanth

நடிகர் விஜயகாந்த் உடன் சினிமாவிலும் அரசியலிலும் தொடர்ந்து பணியாற்றுபவர் நடிகர் மீசை ராஜேந்திரன். இவர் சமீபத்தில் விஜயகாந்த் பற்றி பல பேட்டிகளில் விரிவாக பேசி வருகிறார். அப்படி ஒரு பேட்டியில் விஜயகாந்த் இயக்கத்தில் வெளியான ஒரு படத்தில் தான் நடித்த அனுபவத்தை பற்றி பேசியுள்ளார்.

நடிகர் விஜயகாந்த் ஆரம்பத்தில் சினிமா வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் போது ஒரு படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது உணவு இடைவேளையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அந்த படத்தின் கதாநாயகன் ஷாட்டுக்கு ரெடியாகி வந்துவிட்டதால் அவருடன் நடிக்க வேண்டிய விஜயகாந்த் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அவருடைய தட்டை பிடுங்கி அவரை ஷாட்டுக்கு அழைத்துச் சென்றதாக மீசை ராஜேந்திரன் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பிறகுதான் தான் நடிகர் ஆனால் உணவு பிரச்சனை யாருக்கும் இருக்கக் கூடாது என்பதை முடிவு செய்தார். தற்போது விஜயகாந்தின் உணவு உபசரிப்பு பற்றி பெருமையாக பேசுவதற்கு இதுதான் முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.

அதன் பிறகு நடிகர் விஜயகாந்த் இயக்கிய விருத்தகிரி படத்தில் போலிஸ் கதாபாத்திரத்தில் மீசை ராஜேந்திரன் நடித்துள்ளார் அப்போது அக்யூஸ்டை பிடித்து தள்ளும் காட்சியில் அவர் சரியாக நடிக்க வில்லையாம். அப்போது நடிகர் விஜயகாந்த் என்னை ஒரு அக்கிஸ்டாக நினைத்து என்னுடைய சட்டை காலரை பிடித்து இழுத்து தள்ளுங்கள். என்று கட்டளை இட்டு உள்ளார். சற்று தயங்கிய மீசை ராஜேந்திரன் அதன் பிறகு அவருடைய சட்டையை பிடித்து ஒரு அக்யூஸ்டை இழுத்து செல்வது போல் இழுத்துச் சென்றுள்ளாராம். அதன் பிறகு நடிகர் விஜயகாந்த் மீசை ராஜேந்திரனிடம் இப்படி தான் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதன் பிறகு நடிகர் சங்கத் தலைவராக சிறப்பாக பணியாற்றி கொண்டிருந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் அரசியல் கட்சி தொடங்கியவுடன் நடிகர் சங்க பதவியை ராஜினாமா செய்தாராம். ஆனால் ராஜினாமா செய்ய வேண்டாம் என பலர் கூறியும்   இருந்தால் ஒரு பதவியில் மட்டும் இருக்க வேண்டும். இரண்டு பதவியில் இருந்தால் சமாளிப்பதில் சிக்கல் வரும் என்று கூறி  நடிகர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து உள்ளாராம்.