நிச்சயதார்த்தம் பாதியில் நின்றபோது என்னை பைத்தியம்னு சொன்னாங்க அதனால தான் எனக்கு திருமணமே ஆகல.! ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஷால்…

vishal
vishal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஷால் அவர்கள் செல்லமே என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார் என்று தான் சொல்ல வேண்டும் அதன் பிறகு சண்டக்கோழி, தாமிரபரணி, திமிரு, பூஜை, போன்ற பல திரைப்படங்களில் நடித்து ஒரு மாஸ் ஹீரோவாக சினிமாவில் நிலை நாட்டுகிறார்.

இதனை தொடர்ந்து  லத்தி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இருந்தாலும் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வந்துள்ளது.

இந்த நிலையில் நடிகர் விஷால் அவர்கள் நிச்சயம் நின்னு போனதால் என்னை பைத்தியக்காரர் என்று சொன்னார்கள் என்று கூறி தன்னிடமிருந்த ஆதங்கத்தை கொட்டி தீர்த்து உள்ளார் இதனால் விஷால் ரசிகர்களுக்கு கொஞ்சம் சோகமளிக்கும் செயலாக இது அமைந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஷால் அவர்கள் அனிஷா என்பவரை காதலித்து வந்தார் அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு இவர்களுடைய காதல் நிச்சயதார்த்தத்தில் வந்து முடிந்தது ஆனால் எதிர்பாராத விதமாக நிச்சயதார்த்தம் நின்றது மட்டுமல்லாமல் திருமணமும் நின்னு போனது.

ஆனால் இது எதுவுமே தெரியாமல் இருந்த ரசிகர்கள்  உங்களுக்கு எப்போது திருமணம் நடக்கிறது என்று கேள்வியாக எழுப்பினார்கள் அப்போது என்ன சொல்வது என்றே தெரியாமல் ஆர்யாவுக்கு எப்போது திருமணமோ அப்போதுதான் எனக்கும் திருமணம் என்று சமாளித்து உள்ளாராம் அது மட்டுமல்லாமல் நடிகர் சங்கம் கட்டிடம் எப்போது கட்டி முடியுமோ அப்போதுதான் என்னுடைய திருமணம் என்றும் கூறிவந்துள்ளார்.

இது குறித்து லத்தி படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகர் விஷால் அவர்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னுடைய வாழ்க்கையில் மோசமான ஆண்டு என்று கூறி நெஞ்சை பதபதைக்க வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நிச்சயதார்த்தம் நின்னு போனதால் என்னை பைத்தியம்னு கூட சொன்னாங்க அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் இருந்து வருவதாக அந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.