நடிகர் சிவகார்த்திகேயன் சினிமா உலகில் குறைந்த திரைப் படங்களில் நடித்திருந்தாலும் அவரது படங்கள் ஒவ்வொன்றும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையைக் கிளப்புகின்றன அதனால் இவரது சினிமா பயணம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
அதற்கு ஏற்றார் போல தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி வருகிறார். சொல்லப்போனால் இப்போது ஒரு படத்திற்கு சுமார் 25 கோடி சம்பளம் வாங்குகிறார் டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் டான்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து சிவங்கி, பிரியங்கா அருள்மோகன், சமுத்திரகனி, எஸ் ஜே சூர்யா என மிகப்பெரிய ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்து அசத்தி உள்ளது. டாக்டர் படத்தை போலவே இந்த படமும் 100 கோடி கிளப்பில் இணையும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது காரணம் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களும்..
தற்போது இந்த படத்தை பார்க்க கூட்டம் கூட்டமாக திரையரங்கை நாடி வருகின்றனர் அதனால் நாளுக்கு நாள் வசூல் அதிகரித்துள்ளது. உலக அளவில் இதுவரை டான் படம் 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது இன்னும் போகின்ற நாட்களில் நல்ல வசூலை அள்ளி நிச்சயம் 100 கோடி கிளப்பில் இணையும் என கூறப்படுகிறது.
இதனால் படக்குழு செம்ம சந்தோஷத்தில் இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் டான் திரைப்படம் எப்போது OTT தளத்தில் வெளியாகும் என்ற செய்தியும் கிடைத்துள்ளது அதன்படி பார்வையில் ஜூன் 10 ஆம் தேதி சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் வெளியாகும் என தெரிய வருகிறது. OTT தளத்திலும் வெளியாகி டான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெறும் என கூறப்படுகிறது.