தன் மகளுடன் இருக்கும் பொழுது காது கிழிய கிழிய கெட்ட வார்த்தைகளால் திட்டியவர்களுக்கு தரமான பதிலடி கொடுத்த சூரி.! கீழ இருக்கிறவன் ஒரு நாள் உயரத்துக்கு வருவான் என நிரூபித்து காட்டிய சூரி…

soori
soori

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் சூரி இவர் முதன்முதலாக தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் அந்த திரைப்படத்திற்கு பிறகு தான் இவருக்கு பரோட்டா சூரி என்று பெயரும் கிடைத்தது. இப்படி சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தான் இன்று முன்னணி காமெடி நடிகராக திகழ்கிறார்.

இவர் தற்பொழுது முன்னணி நடிகர்களாக தமிழ் சினிமாவில் உயர்ந்து நிற்கும் விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி விட்டார். மேலும் நடித்தால் காமெடியனாக மட்டும் நடிக்காமல் தற்பொழுது ஹீரோவாகவும்  தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர் என்ற அந்தஸ்தில் இருப்பவர் இயக்குனர் வெற்றிமாறன் இவர் இயக்கத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக இருக்கின்றன இந்த நிலையில் தற்போது காமெடி நடிகர் சூரியை வைத்து இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் சூரி இதில் ஹீரோவாக நடித்துள்ளதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இந்த உயரத்திற்கு வருவதற்கு முன்பு நான் பல அவமானங்களை சந்தித்து வந்துள்ளேன் என சூரி கூறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தான் ஒரு இடத்தில் அவமானப்பட்டதை சவாலாக ஏற்றுக் கொண்டுதான் தற்பொழுது அதை நிறைவேற்றியுள்ளார். சூரி தனக்கென ஒரு வீடு வாங்க வேண்டும் என்று ஆசை இருந்துள்ளது அதனால் ஒரு பிளாட்டை வாங்க முடிவு செய்தார் ஆனால் எந்த இடத்தில் வாங்க வேண்டும் என்று நினைத்தபொழுது தான் ஆடிடிஷனுக்காக சென்று மயங்கி விழுநது அவமானப்பட்ட சாலிகிராமத்தில் தான் வீடு வாங்க வேண்டும் என முடிவு செய்துள்ளார்.

அதை தன் கனவாக மாற்றி இருந்தார். எப்படியாவது அந்த வீட்டை வாங்க வேண்டும் என்று ஒற்றை காலில் நின்றுள்ளார் சூரி. சூரியின் மனைவியோ பிளாட் ஓனரிடம் கொஞ்சம் விலையை குறைத்துக் கேளுங்கள் என கேட்டுப்பாருங்கள் என கூறியுள்ளார் சூரி அவர்களிடம் சூரி அதற்கு எதிர்மறையாக இரண்டு மூன்று லட்சம் அதிகமானாலும் பரவாயில்லை எனக்கு இந்த இடம்தான் வேண்டும் என அவமானப்பட்ட அந்த இடத்தையே வாங்கி பிளாட்டில் குடியேறி இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் ஒரு பிளாட் முன்பு தன்னுடைய மகளுடன் புகைப்படம் எடுத்துள்ளார் சூரி அப்பொழுது அங்கு இருந்தவர்கள் கெட்ட வார்த்தைகளால் காதில் கேட்க முடியாத வார்த்தைகளால் திட்டி தீர்த்து உள்ளார்கள் அதன் பின் சூரி வளர்ந்த பிறகு அந்த இடம் விலைக்கு வந்துள்ளது அந்த பிளாட்டையும் சூரி வாங்கி தன்னுடைய ஆபிஸாக மாற்றி உள்ளார். இப்படி கீழே இருக்கிறவன் எப்ப வேணாலும் மேலே வருவான் என நிரூபித்து காட்டியுள்ளார் சூரி.