மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம், என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதுவரைக்கும் எந்த ஒரு இயக்குனருக்கும் இல்லாத ரசிகர்கள் கூட்டம் லோகேஷுக்கு இருக்கு என்று பலரும் கூறி வருகிறார்கள்.
அவர்களின் நம்பிக்கையை வீணாக்காதவாறு ஒவ்வொரு திரைப்படத்திலும் தனது தனித்துவமான கதையை உருவாக்கி வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அந்த வகையில் இவர் இயக்கிய நான்கு படங்களும் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது அது மட்டுமல்லாமல் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் கமல்ஹாசனுக்கு ஒரு கம்பேக் திரைப்படமாக அமைந்தது.
இதனை தொடர்ந்து தற்போது விஜயை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக இணைந்து இருக்கிறார்கள் இதனால் லியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது.
இந்த நிலையில் மேலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை இரட்டிப்பாகும் வகையில் லியோ படத்தின் டைட்டில் ப்ரமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது இதனை தொடர்ந்து லியோ திரைப்படம் LCU-வில் இணைய இருக்கிறது என்று பல தகவல்கள் வெளியானாலும் அது எதுவும் உறுதிபடுத்தப்பட்ட தகவலாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்தாலும் ஒரு சில ஆதாரங்களை கண்டுபிடித்து ரசிகர்கள் LCU-வில் தான் லியோ இணைகிறது என்று கூறி வருகிறார்கள். இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் ஒரு youtube சேனலுக்கு பேட்டி அளிக்கும் போது லியோ படத்தின் கதை கருவை கூறியிருக்கிறார் இதை பார்த்து ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.
அதாவது ஒரு சிங்கம் காட்டை விட்டு வெளியே போனாலும் அது ராஜா தான் என்பது போல் நடந்து கொள்ளும் அது மட்டுமல்லாமல் அது வயதான பிறகு திரும்பவும் காட்டிலேயே வந்து விட்டு விடுவார்கள். வயதான பிறகு அதனால் உணவு கூட தேட முடியாது அப்படி இருக்கும் பட்சத்தில் உணவே வேண்டாம் என்று வெறுத்து வாழும் அந்த சமயத்தில் 10 நரிகள் அதை சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று அந்த சிங்கத்தை வேட்டையாட போகும் அப்போது அந்த சிங்கம் எழுந்திரித்து ஒரு பார்வை பார்க்கும் அந்தப் பார்வைக்கு “நான் சாப்பாடு வேண்டாம் என்று நினைக்கிறேன் ஆனால் என்னை நீங்கள் என்னை கொன்று சாப்பிடலாம் என்று வந்திருக்கிறீர்களா என்று ஒரு கொலவெறியில் அந்த சிங்கம் 10 நரிகளையும் பார்க்கும் என்று லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார்.
இது கிட்டத்தட்ட லியோ படத்தின் கதையாக இருக்கும் என கூறப்படுகிறது ஏனென்றால் லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய் அவர்கள் ஒரு வயதான தோற்றத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது அதுமட்டுமல்லாமல் லியோ என்றால் சிங்கத்துடைய அடையாளம் தான் லியோ ஆகையால் லோகேஷ் சொன்னது போல இதுதான் கதை கருவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அந்த பத்து நரி அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சூர்யா, விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஹரிஷ் உத்தமன், மிஷ்கின் இவர்கள் அந்த பத்து நரிகளாக இருக்கலாம் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் லியோ படத்தின் பிரமோ வீடியோவில் நடிகர் விஜய் தனியாக ஒரு வீட்டில் இருக்கிறார் அவரை நோக்கி பல காருகள் வேட்டையாட வருவது போல இருக்கும். இதைதான் லோகேஷ் கூறியிருக்கிறார். இதனால் ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் காத்திருகிறார்கள்.
மேலும் இந்த படத்தின் படபிடிப்பு தற்போது காஷ்மீரில் படமாக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து லியோ படத்தில் நடித்து வந்த மிஷ்கின் அவர்களின் காட்ச்சிகள் படமாக்கப்பட்டு முடிந்து விட்டது. அவரை தொடர்ந்து அடுத்ததாக கவுதம் மேனனின் காட்ச்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது லியோ படபிடிப்பில் நடிகர் சஞ்சய் தத் இணைந்து உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த திரைப்படம் விஜய்க்கு ஒரு மிகப்பெரிய வெற்றி படமாகதான் இருக்கும் என்று ரசிகர்கள் இப்போதிலிருந்தே கூறி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் லியோ திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே 400 கோடிக்கும் மேல் வசூல் செய்து உள்ளதாக கூறபடுகிறது. படம் வெளியானால் 1000 கொடியை தாண்டும் என்று கூறபடுகிறது.