நடிகர் மற்றும் நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் ஜோடியாக நடித்தால் அவர்கள் காதல் கிசுகிசுவில் ஈசியாக சிக்கி விடுகிறார்கள். அதே போல் ஒரு சில நடிகர்கள் தன்னுடன் நடிக்கும் சக நடிகைகளை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் ஏராளம் என்று சொல்லலாம்.
இந்த வகையில் தற்போது ஒரு வாரிசு நடிகராக சினிமாவில் ஈசியாக நுழைந்த ஒரு நடிகர் தன்னுடன் ஓரிரு திரைப்படத்தில் நடித்த நடிகையை காதலித்து வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. வாரிசு நடிகர் என்பதால் சினிமாவில் ஈஸியாக நுழைந்து விட்டார் ஆனால் பட வாய்ப்பு எதுவும் சரியாக கிடைக்காததால் நடிகருக்கான அந்தஸ்தை வாரிசு நடிகரால் பெற முடியவில்லை.
ஆனால் தற்போது வரை இந்த வாரிசு நடிகர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவரது தந்தை போலவே இவரும் சினிமாவில் ஏதாவது ஒரு நல்ல இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று போராடி வருகிறார். மேலும் அந்த வாரிசு நடிகர் தற்போது ஒரு சில திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார்.
இந்த நிலையில் ஒரு நடிகை உடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தார். அந்த நடிகை நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் எங்களுக்குள் எந்த ஒரு பழக்கமும் கிடையாது என்று சமூக ஊடகங்களில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் ஆனால் அந்த நடிகையின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு அவருடன் ஜாலியாக கொண்டாடியுள்ளார் அந்த வாரிசு நடிகர்.
அதனை தொடர்ந்து தற்போது ஒரு நிச்சயதார்த்த விழாவில் அந்த வாரிசு நடிகரும் அந்த நடிகையும் கலந்து கொண்டு உள்ளனர் அப்போது இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது.
இதைப் பார்த்து ரசிகர்கள் இவர்கள் இருவரும் காதலிப்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்று ரசிகர்கள் உறுதி செய்து விட்டார்கள். இதுவரைக்கும் ஊரை ஏமாற்றி வந்த இந்த இரண்டு ஜோடிகளும் தற்போது கையும் களவுமாக மாட்டிக் கொண்டனர்.
இதேபோல அந்த வாரிசு நடிகரின் அப்பாவும் தன்னுடன் நடித்த சக நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மகனும் தன்னுடன் நடித்த நடிகையை காதலித்து வருகிறார் மேலும் இவர்களின் காதல் விஷயம் இவர்களுடைய வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியவே இவர்களுடைய திருமணத்திற்கு ஓகே சொல்லி விட்டார்கலாம். விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.