திரை உலகில் உச்சத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்த சிம்பு அவ்வப்போது சில சர்ச்சையான விஷயங்களில் மாட்டுவதும் பின் திடீரென தன்னை மாற்றிக் கொண்டு வலம் வருவது அவருக்கு கைவந்த கலை ஆனால் சமீபகாலமாக சினிமா நம்மை எப்படி கொண்டு சேர்த்துள்ளது என்பதை சரியாக புரிந்து கொண்டு சிம்பு.
தன்னை முழுவதுமாக மாற்றிக்கொண்ட தற்பொழுது பயணிப்பதால் ரசிகர்கள் இவருக்கு பக்கபலமாக இருக்கின்றனர். ரசிகர்களுக்காக சிறந்த படங்களை கொடுக்கவும் தற்போது சிம்பு முனைப்பு காட்டி வருகிறார் அந்த வகையில் ஈஸ்வரன் திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு உடன் மாநாடு என்ற திரைப்படத்தில் கமிட் ஆனார் இந்த படப்பிடிப்பு அனைத்தும் தற்போது முடிவடைந்து உள்ளது.
ஆனால் மற்ற வேலைகளை முன்புறமாக படக்குழு செய்துகொண்டு இருந்தாலும் அனைவரும் ஒரே இடத்தில் கூட முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளதால் படக்குழுவினர் அனைவரும் ட்விட்டர் பக்கத்தில் உரையாடி வருகின்றனர்.
இந்த உரையாடலில் வெங்கட் பிரபு, யுவன் சங்கர் ராஜா, நடிகர் சிம்பு போன்ற முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர் இந்த படம் குறித்து பல்வேறு விஷயங்களை பேசி வந்தனர் அப்பொழுது இந்த படத்தின் ஷூட்டிங் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை சிம்பு பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியது : படத்தின் ஷூட்டிங்கின்போது ஒரு சில முக்கிய செய்திகள் ஒரே டேக்கில் எடுக்கப் பட்டதாக தெரிவித்தார். இதற்காக இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் நன்றி தெரிவித்தார். மேலும் பேசிய நடிகர் சிம்பு சினிமா ஆரம்பத்தில் எமோஷனல் காட்சிகளில் நடிக்க ரொம்ப கஷ்டப்பட்டேன் கண்ணீர் வருவதற்காக அடியும் வாங்கி உள்ளேன் என தெரிவித்தார்.
தற்பொழுது அது எல்லாம் கிடையாது எமோஷனல் மற்றும் முக்கியமான சீன்களில் நடிப்பது எனக்கு கேக் பீஸ் சாப்பிடுவது போன்று இருப்பதாகவும் கூறினார். எமோஷனல் காட்சிகளில் நடித்த பிறகும் கண்ணில் தண்ணீர் வருவதை தடுக்க முடியவில்லை எனவும் கூறினார்.