குட்டி கதை சொல்ல ரெடியான விஜய்..! வாரிசு இசை வெளியீட்டு விழா எப்போ.? எங்கு தொடங்குகிறது தெரியுமா.?

vijay
vijay

தளபதி விஜய்க்கு தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் ரசிகர்கள் இருந்தாலும் அவர் பிறமொழி பக்கம் போய் நடித்தது கிடையாது ஆனால் தற்போது இவர் தெலுங்கு பக்கம் கவனம் செலுத்துகிறார் அந்த வகையில் வாரிசு திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார் மேலும் படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகி வருகிறது.

இந்த படத்தை தில் ராஜூ மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்து உள்ளார் படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் மற்றும் ஆக்சன் காமெடி காதல் என அனைத்தும் கலந்த ஒரு படமாக உருவாகியுள்ளதாம். விஜய் இந்த படத்தில் ஒரு பணக்காரராக நடிக்கிறார் அவருடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா..

மற்றும் ஜெயசுதா, சங்கீதா, யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஷாம், சரத்குமார், பிரகாஷ்ராஜ் போன்ற பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது படம் அடுத்த வருடம் பொங்கலை குறி வைத்து ரிலீஸ் ஆக இருக்கிறது இந்த படத்தை தளபதி ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

படம் வெளிவருவதற்கு முன்பாக அடுத்தடுத்து அப்டேட்களை கொடுக்கவிருக்கிறது இதுவரை ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர் மற்றும் கடைசியாக ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலையும் ரிலீஸ் செய்தது. இதனைத் தொடர்ந்து அடுத்து ட்ரெய்லர் டீசர் போன்றவை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா முதலில் நடந்து விடும் என கூறப்படுகிறது.

ஆம் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் டிசம்பர் 24ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடக்க இருக்கிறதாக கூறப்படுகிறது விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பட குழு அறிவிக்கும் என சொல்லப்படுகிறது.