தமிழ் சினிமாவில் பல்வேறு காமெடி நடிகர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் நாகேஷ் இல் ஆரம்பித்து கவுண்டமணி செந்தில் இவர்களைத் தொடர்ந்து வடிவேலு விவேக் தற்போது ட்ரெண்டிங்கில் காமெடி நடிகராக வலம் வருபவர் தான் சூரி, சந்தானம், சதீஷ்.
அந்தவகையில் கேலி பேச்சையும் டைமிங் பஞ்சையும் வைத்து மிகப் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சந்தானம் இவர் காமெடியனாக திரைப்படத்தில் நடித்திருந்தாலும் துணை கதாபாத்திரத்திலும் ஒருசில திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் தற்போது ஹீரோவாகவும் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறார். பொதுவாக சென்னை சிலாங்கை மிக அற்புதமாக பேசுவதில் சந்தானம் மிகவும் திறமை வாய்ந்தவர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
இவ்வாறு சந்தானத்தின் காமெடிக்காக காத்திருந்த காலம் போய் தற்போது இவருடைய திரைப்படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் இவர் முதன்முதலாக தொலைக்காட்சியில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் ரசிகர் மத்தியில் பிரபலமானார்.
இவ்வாறு தன்னுடைய திறமையை பயன்படுத்தி படிப்படியாக சினிமாவிற்குள் நுழைந்த நடிகர்களில் இவரும் ஒருவர். பொதுவாக பிரபலங்கள் தங்களுடைய ரசிகர்களுடன் இணையத்தில் உரையாடுவது வழக்கம் நான்.
அந்த வகையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் சந்தானத்திடம் தலைவா இப்படியே இருந்தால் எப்போது திருமணம் செய்து கொள்வது என கேள்வி எழுப்பியிருந்தார் இதற்கு பதிலளித்த சந்தானம் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது என்று கூறியது மட்டுமல்லாமல் தான் எத்தனை முறை தான் திருமணம் செய்வது என தனது பாணியில் பதிலளித்துள்ளார்.
நடிகர் சந்தானம் சினிமா துறையில் பிரபலம் ஆவதற்கு முன்பாகவே உஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தற்போது ஒரு மகனும் உள்ளார் அவரே தற்சமயம் சினிமாவில் நடிக்கப்போவதாக செய்திகள் சமூக வலைதளப் பக்கத்தில் பரவிவருகிறது.