கர்ப்பமாக இருக்கும் பொழுதுதான் விஜயுடன் அந்த குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடினேன்.! உண்மையை போட்டு உடைத்த பிரபல நடிகை

சினிமாவில் பல நடிகைகள் முன்னணி நடிகைகளாக வலம் வந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இவர்களுக்கு இன்று சினிமாவில் இருக்கும் மார்க்கெட் மொத்தமாக இல்லாமல் போய்விடுகிறது. இவர்கள் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டாலும் பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

அந்தவகையில் பிரபல நடிகை விஜய் நடிப்பில் வெளிவந்த ஒரு படத்தில்  குத்துபாடல் ஒன்றுக்கு ஆடும் பொழுது நான் கர்ப்பமாக இருந்தேன் என்று கூறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.அந்த வகையில் ஒரு முன்னணி நடிகரின் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக அதில் குத்துப்பாட்டு இல்லாமல் இருக்காது.

இதனைத் தெரிந்தும் இளம் நடிகைகள் முதல் முன்னணி நடிகர்கள் வரை அனைவரும் விஜயுடன் நடிப்பதற்கு ஆசைப்படுவது தற்போது வரை இது வழக்கமாக உள்ளது. அதோடு சில திரைப்படங்களில் குத்து பாடல் மட்டும் ஆடுவதற்கு புதிதாக நடிகைகளையும் அறிமுகப்படுத்துவார்கள்.

அந்த வகையில் முதன் முதலில் தயாரிப்பாளராக உதயநிதி ஸ்டாலின் குருவி திரைப்படத்தின் மூலம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இத்திரைப்படத்தை தரணி இயக்கியிருந்தார்.  அந்த வகையில் இத்திரைப்படத்தில் விஜய், த்ரிஷா போன்ற பல முன்னணிகள்  நடித்திருந்தார்கள்.

இத்திரைப் படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அந்த வகையில் அனைத்து பாடல்களையும் வித்யாசாகர் இசையமைத்திருந்தார். அந்த வகையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த கொளுத்துங்கடா வேட்டு என்ற பாடல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

அந்த வகையில் இந்தப் பாடலில் செம குத்தாட்டம் போட்டு இருந்தவர் தான் நடிகை மாளவிகா. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் இந்த பாடலில் நடனம் ஆடும் பொழுது கர்ப்பமாக இருந்ததாக கூறியிருந்தார். எனவே ரசிகர்கள் கர்ப்பமாக இருக்கும் போது ஏன் நடனமாட வேண்டும் என பல கேள்விகளை எழுப்பி வந்தார்கள். ஆனால் பெரிதாக இதற்கு பதில் அளிக்காமல் இப்பாடலில் நான் நடனமாடும் போது கர்ப்பமாக இருந்தேன் மட்டும் கூறியுள்ளார் மாளவிகா.