மறைந்த நடிகர் சரத் பாபுவை பார்த்தாலே எனக்கு பயம் தான்.? பழைய நினைவுகளை பகிர்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினி..

sarath babu
sarath babu

தென்னிந்திய சினிமா உலகில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பெயரையும் புகழையும் சம்பாதித்தவர் சரத் பாபு இவர் உடல்நலக்குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன்பு இயற்கை எழுதினார் இவருடைய இறப்பு செய்தியை கேட்டு பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்

வர முடியாதவர்கள் சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருந்தினர். சரத் பாபு தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி தொடங்கி பல இளம் நடிகரின் படங்களில் நடித்துள்ளார். ரஜினி உடன் இவர் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள் தான்.

ரஜினி சரத் பாபுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு மட்டுமல்லாமல் அவர் குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார்.  அவர் சொன்னது நான் சிகரெட் பிடித்தால் சரத் பாபுவுக்கு சுத்தமாகவே பிடிக்காது நான் சிகரெட் பிடிப்பதை பார்த்தால் வந்து அந்த சிகரெட்டை பிடுங்கி தூக்கிப்போட்டு மிதிப்பார் மேலும் சிகரெட் பிடிக்கக்கூடாது நீங்க ரொம்ப நாள் வாழனும் என எனக்கு அட்வைஸ் கொடுப்பார்.

இப்படி சரத்பாபு சொன்ன பிறகு நான் அவரை பார்த்தாலே சிகரெட் குடிக்க மாட்டேன் அவர் மீது எனக்கு மரியாதை அதிகமாக இருந்ததாகவும் ரஜினி கூறினார். இப்படிப்பட்ட சரத்பாபு ரஜினிக்கு சிகரட்டை பற்ற வைத்த சம்பவத்தை பற்றியும் கூறியுள்ளார் அண்ணாமலை படத்தில் நானும் சரத்பாபுவும் நடித்துக் கொண்டிருந்தோம்

அப்பொழுது படத்தில் நான் என் நண்பன் சரத்பாபு வீட்டுக்கு சென்று கோபமாக ஒரு டயலாக் பேச வேண்டும் அந்த டயலாக் 10 15 டேக்குகள் ஆனது ஒரு கட்டத்தில் சரத் பாபு தன்னிடம் வந்து நீங்கள் சிகரெட் அடியுங்கள் ரிலாக்ஸ் ஆகுங்கள் எனக்கூறி அவறே அதை பற்ற வைத்தார். அந்த சிகரெட் பிடிச்சதுக்கு அப்புறம் ரிலாக்ஸா அந்த டயலாக்கை நடித்து முடித்தேன் நீ என கூறினார்.