அஜித்திற்கு திருமணமானதும் எனது கண்கள் கலங்கியது ரோஜா சீரியல் நடிகை ஓபன் டாக்.!

ajith-2
ajith-2

தமிழ்நாட்டு ரசிகர்கள் பலரும் தன்னம்பிக்கை மறுபெயர் எனக் கேட்டால் உடனே அவர்கள் கூறும் வார்த்தை தல அஜித் என்று கூட கூறலாம் அந்த அளவிற்கு தல அஜித்தின் ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

மேலும் தல அஜித் நடிப்பில் மிரட்டலாக வெளியாகப்போகும் வலிமை திரைப்படத்தைப் இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் தல அஜித் பிறந்த நாளான மே 1ம் தேதி வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாக உள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு கிட்டத்தட்ட வேகமாக அதிகரித்து கொண்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தேதி அறிவித்தது போல் படத்தின் ரிலீஸ் தேதியை எப்போது அறிவிப்பார்கள் என தயாரிப்பாளர் போனி கபூரை ரசிகர்கள் பலரும் சமூக வலைதள பக்கங்களில் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

மேலும் சன் டிவி தொலைக்காட்சியில் TRPயில் அதிக புள்ளிகளை வென்று வரும் சீரியல் ரோஜா இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தைப் பிடித்தவர் பிரியங்கா இந்நிலையில் பிரியங்கா சமீபத்தில் பேட்டி ஒன்றில் அஜித்தை பற்றி கூறியுள்ளாராம் அதில் அஜித் சாரை எனக்கு மிகவும் பிடிக்கும் அவரது நடிப்பும் எனக்கு மிகவும் பிடித்து விடும்.

priyanka
priyanka

அதுமட்டுமல்லாமல் அஜித் சாருக்கு திருமணம் ஆன பொழுது நான் ரொம்ப பீல் பண்ணினேன் என்று கூறியுள்ளாராம் அஜித் தனது உடன் நடித்து வந்த ஷாலினியை 2000-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த நேரத்தில் இந்த சீரியல் நடிகை பிரியங்கா அஜித் சாருக்கு திருமணமான போது நான் ரொம்ப பீல் பண்ணினேன் என்று கூறி ரசிகர்களிடையே ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளாராம் இதனையடுத்து இந்த தகவலை அறிந்து ரசிகர்கள் பலரும் பிரியங்கா எதற்காக இப்படிக் கூறியுள்ளார் என கோபமாக பல கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.