தளபதி 67 படத்தின் பூஜை எப்பொழுது தெரியுமா.? வெற்றியை கொடுக்க சிறப்பான தேதியை லாக் செய்த லோகேஷ்.!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் வருடத்திற்கு ஒரு சிறந்த படத்தை  கொடுத்து சினிமாவில் வளர்ந்து கொண்டே வருகிறார். கடைசியாக நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று நல்ல வசூல் வேட்டை நடத்தி இருந்தது.

விஜய் உடனடியாக தனது அடுத்த படத்தில் கமிட்டாகி தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் சூட்டிங் ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சோசியல் மீடியாவில் நாளுக்கு நாள் இந்த படத்தில் இணையும் நடிகர் நடிகைகள் யார் என்பதும் அவர்களின் கதாபாத்திரம் குறித்தும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த படம் அடுத்தாண்டு பொங்கலன்று வெளியாகும் எனவும் சமீபத்தில் தகவல் ஒன்று வெளியாகியது.

விஜய் இந்த படத்திற்கு அடுத்து அவர் நடிக்க உள்ள 67வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த படத்தை லலித் தயாரித்து வருகிறார்.  விஜயின் 67வது படம் குறித்து தற்போது ஒரு தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

அதன்படி தளபதி 67 ஆவது திரைப்படம் வருகின்ற அக்டோபர் 3ஆம் தேதி படத்தின் பூஜை தொடங்கப்படும் எனவும் அன்றிலிருந்து படப்பிடிப்பு ஷூட்டிங்  நடத்தப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கு முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தின் பூஜையும் அக்டோபர் 3ம் தேதி தான் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.