தளபதி விஜய் தமிழ் சினிமாவில் அதிக வெற்றி படங்களை கொடுத்த நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் படம் விமர்சன ரீதியாக தோல்வியை தழுவினாலும் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பியது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் விஜய்.
முதல் முறையாக கூட்டணி அமைத்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்க்கு 66-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க செண்டிமெண்ட், ஆக்சன், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு பிரமாதமான படமாக உருவாகி வருவதாக பலரும் கூறி வருகின்றனர்.
இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என சொல்லி உள்ளதை எடுத்து படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. வாரிசு திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, குஷ்பு, யோகி பாபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.
தளபதி விஜய் வாரிசு திரைப்படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இன்னொரு முறை கைகோர்த்து தளபதி 67 படத்தில் நடிக்க இருக்கிறார் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் அந்த படத்திற்கான கதையை தான் மிக தீவிரமாக எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி 67 படத்தின் பூஜை எப்பொழுது போடப்படும் என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் வருகின்ற அக்டோபர் மூன்றாம் தேதி இந்த படத்தின் பூஜை போட 90% வாய்ப்பு இருக்கிறது ஏனென்றால் மாஸ்டர் படத்தின் பூஜை கூட அக்டோபர் 3ஆம் தேதி போடப்பட்டது அதனால் அதே தேதியில் தளபதி 67 படத்தின் பூஜை போட வாய்ப்பு இருப்பதாக வலைப்பேச்சு நண்பர்கள் கூறி வருகின்றனர். இச்செய்தி தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.