செய்திவாசிப்பாளர் கண்மணி மற்றும் சின்னத்திரை பிரபலம் நவீனின் திருமணம் எப்போ தெரியுமா.? அவர்களே சொன்ன தகவல்.

kanmani-and-naveen
kanmani-and-naveen

கடந்த ஆண்டு சின்னத்திரை நட்சத்திரங்கள் பலர் காதல் திருமணம் செய்து கொண்டனர் அதில் ஆர்யன் ஷபானா, மதன் ரேஷ்மா, சித்து ஸ்ரேயா போன்றோர்  திருமணம் செய்து கொண்டு தற்போது சீரியலிலும் தொடர்ந்து நடித்து வருகின்றனர்.

இதில் மதன் மற்றும் ரேஷ்மா இருவரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அபி டைலர் என்ற சீரியலில் சேர்ந்து நடித்து வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் மக்களின் ஃபேவரட் சீரியல்கள் ஆகும்.

அப்படி தமிழ் சீரியல்களில்  டாப் லிஸ்டில் இருக்கும் சீரியல்களில் ஒன்று இதயத்தை திருடாதே.இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு பல ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றன அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து உள்ளன. இதயத்தை திருடாதே சீரியலில் கதாநாயகனாக நடித்துவரும் நவீனுக்கும் கூடிய விரைவில் திருமணம் ஆக உள்ளதாம்.

சோசியல் மீடியாவில் தற்போது ட்ரெண்டாகி வரும் நவீன் மற்றும் சன் டிவி நியூஸ் ரீடர் கண்மணி இருவரும் கூடிய விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. அதனை சமீபத்தில் ஒரு மீடியா நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளனர். நவீன் மற்றும் கண்மணி இருவரும் காதலித்து வருவதாக ரசிகர்கள் பலரும் நினைத்து வந்த நிலையில் இவர்களின் பெற்றோர்களின் முடிவின் பிறகுதான் இவர்கள் பேசத்தொடங்கினார்.

எனவும்  அடுத்த மாதம் இவர்களது நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாகவும் பின்பு ஜூன் மாதத்தில் திருமணம் நடக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். இது செய்தியைக் கேட்டு நவீன் மற்றும் கண்மணி ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியாக உள்ளனர்.