முதல்முறை அஜித் – விஜய் சந்தித்துக் கொண்டது எங்கு, எப்பொழுது தெரியுமா? வெளிவந்த சுவாரசிய தகவல்.!

ajith and vijay
ajith and vijay

சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களுக்கு எப்பொழுதும் போட்டிகள் அதிகம். ஏனென்றால் அந்த அளவிற்கு அந்த நடிகர்களை பின் தொடர்ந்து பல இளம் நடிகர்கள் வளர்ந்து வருகின்றனர். அப்படி ஒரு கட்டத்தில் ரஜினி கமல் இருவரும் பல சிறப்பான படங்களை கொடுத்து சினிமாவில் ஜொலித்து வந்தனர். தற்போது இவர்கள் இருவருக்கும் வயதாகி இருந்தாலும் அவ்வப்போது ஒரு தரமான படத்தை வெளியிட்டு தான் வருகிறார்கள்.

அவர்களைப் பின் தொடர்ந்து ரஜினி கமலுக்கு அடுத்ததாக விஜய் அஜித் இருவரும் இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர்கள். அஜித் விஜய்யும் வருடத்திற்கு ஒரு சிறப்பான படங்களை கொடுத்து அசத்துகின்றனர். மேலும் அந்த படங்கள் வெற்றியடைய அவர்களது ரசிகர்கள் முக்கிய காரணமாக அமைகின்றனர்.

சினிமாவில் இரு தூண்கள் ஆக இருக்கும் அஜித் விஜயின் ரசிகர்கள் போட்டி போட்டு வந்தாலும் இருவருக்குள் எந்த வித போட்டியும் இல்லை நல்ல நண்பர்களாக இருந்த வருகின்றனர். தற்போது நடிகர் அஜித் தனது 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் கைகோர்த்து வாரிசு என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அஜித் விஜய் இருவரும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என்றாலும்..

அவர்கள் குறித்த தகவல்கள் வெளிவந்த வண்ணமே தான் இருக்கின்றன. அப்படி தற்போது இவர்கள் குறித்து வெளிவந்த தகவல் என்னவென்றால் அஜித் விஜய் இருவரும் முதல் முதலாக தங்களை நண்பர்களாக அறிமுகப்படுத்திக் கொண்ட முதல் சந்திப்பு எப்போது நடந்தது என்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அஜித்தின் அமராவதி திரைப்படம் வெளிவந்த போது படம் எப்படி இருக்கிறது..

என்பதை ரசிகர்கள் மூலம் தெரிந்து கொள்ள திரையரங்கின் வாசலில் அஜித் காத்துக் கொண்டிருந்தார். அப்போது விஜயும் தனது நண்பர்களுடன் அமராவதி படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்து அஜித் இடம் தன்னை விஜய் என அறிமுகப்படுத்திக்கொண்டார். இதுதான் அஜித் விஜய்யின் முதல் சந்திப்பு என கூறப்படுகிறது. இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.